பின்னர் நான் துதிப்பேன்!

B.A. Manakala

தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன். சங். 69:30.

எங்களுடைய குழந்தைகளை, வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவதற்காக..., பெற்றோராகிய நாங்கள், அவர்களுக்குச் சில அற்புதமான வெகுமதிகளை வழங்குவதுண்டு. மதிப்பிடுதலும், வெகுமானம் கொடுப்பதும், பொதுவாக வார இறுதியில் தான் இருக்கும். அவர்கள் வெகுமதியைப் பெற்றவுடன், அடுத்த வாரத்திற்காகவும் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.

தேவன், நம்முடைய பாடுகளிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் நம்மை இரட்சித்துள்ளதால், தாவீதைப் போல, நாமும் அவரைத் துதிக்க வேண்டியது அவசியம் (சங். 69:29-30). சில வேளைகளில்..., தேவன் நமக்குச் செய்திருக்கிற நன்மைகளுக்காக அவரைத் துதிக்கும்படி நமக்கு நினைப்பூட்ட..., மற்றவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால்..., நம்முடைய வாழ்வின்  ஒவ்வொரு க்ஷணப் பொழுதும் தேவனைத் துதிப்பதற்குப் பழகிக் கொள்வது முக்கியமானது.... ஏனென்றால், அவர் இந்த பூமியிலும், நமக்காகவும் செய்திருப்பவை எல்லாமே துதிக்கப்படத்தக்கவை. எனவே, தேவனுக்காக நாம் செலுத்தும் துதியானது, அவர் நமக்குத் தனிப்பட்ட விதத்திலே என்ன செய்திருக்கிறார் என்பதைச் சார்ந்து இருக்கக் கூடாது.

தனிப்பட்ட முறையிலே, தேவன் எனக்குச் செய்த நன்மைகளுக்காக மட்டுமேயல்லாமல்..., எப்போதுமே... நான் எவ்வாறு தேவனைத் துதிப்பேன்?

தேவன் நமக்காகச் செய்கிற செயல்கள் நிபந்தனையற்றவை; ஆனால்... பொதுவாக..., மனிதர்களாகிய நாம்  நிபந்தனையிடுகிறவர்கள்!

ஜெபம்: கர்த்தாவே, நான் ஒருபோதும் உம்மைத் துதிப்பதை நிறுத்தாதபடிக்கு..., நீர்  செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் காணத்தக்கதாக..., என் கண்களைத் திறந்தருளும். ஆமென்!

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்