இது கர்த்தரைப் பிரியப்படுத்தும்

B.A. Manakala

கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப் பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். சங். 69:31.

ஒரு வீட்டிற்கு விருந்தினர்களாகச் சென்றிருந்த நானும் என் நண்பரும்..., அங்கே உணவருந்தினோம். அதில் பரிமாறப்பட்ட பொரியல்களுள் ஒன்று, என் நண்பருக்குப் பிடிக்காதது என்பதால்..., மீதமுள்ள உணவு வகைகளை ரசித்துச் சாப்பிடும்பொருட்டு ....., அவர் அப்பொரியலை வேகமாகச் சாப்பிட்டு முடித்து விட்டார். ஆனால், எங்களுக்கு விருந்தளித்தவரோ.., என் நண்பருக்கு அந்தப் பொரியல் மிகவும் பிடித்திருப்பதாக நினைத்துக் கொண்டதால், அதே கூட்டு அவருக்கு இன்னும் அதிகமாகப் பரிமாறப்பட்டது!

தன்னுடைய துதி, பாட்டு, நன்றிபலி மற்றும் ஆராதனையே தேவனைப் பிரியப்படுத்தினது..., என்று சொல்லக் கூடிய நம்பிக்கை தாவீதுக்கு இருந்தது (சங். 69:30-31). தேவனுக்குப் பிரியமில்லாத ஏதோ ஒன்றையே நான் தொடர்ந்து அவருக்குக் கொடுத்துக் கொண்டிருப்பேனானால்..., அது..., என் நண்பருக்குப் பிடிக்காத பதார்த்தத்தை அவருக்குப் பரிமாறினது போலத்தான் இருக்கும்! நம்முடைய காணிக்கைகளோடு கூடிய... நமது மனப்பான்மை, நேர்மை, அன்பு இன்னும் இதுபோன்ற... நம்முடைய இருதயங்களின் இன்றியமையாத குணங்களையும் தேவன் கவனிக்கிறார். எல்லாக் காணிக்கைகளையும் அவர் அங்கீகரிக்காமல் போகலாம்! காயீனை நினைத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள் (ஆதி. 4:5).

கர்த்தரைப் பிரியப்படுத்துகிறது எது என்று உண்மையிலேயே எனக்குத் தெரியுமா? நான் என்ன கொடுத்துக் கொண்டிருக்கிறேனோ..., அதிலே கர்த்தர் மெய்யாகவே மகிழ்ச்சியடைந்தாரா?

தேவனுக்கு நான் அளிக்கிற என்னுடைய காணிக்கை..., அவருக்கு மெய்யாகவே பிரியமான ஒன்றாக இருந்தால் மட்டுமே, அது அர்த்தமுள்ளதாகும்.

ஜெபம்: கர்த்தாவே, உம்முடைய இருதயத்தைப் புரிந்து கொண்டு, உமக்குப் பிரியமானதை மட்டும் கொடுக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்