சாந்தகுணமுள்ளவர்கள் தேவனை தரிசிப்பார்கள்
B.A. Manakala
சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும். சங். 69:32.
ஒருமுறை, ஒரு பள்ளியின் முதல்வர், கூச்சல் நிறைந்த ஒரு வகுப்பறைக்குள்..., ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். மாணவர்களுள் ஒருவன்..., யாரோ தங்களைக் கூர்ந்து நோக்குவதைக் கவனித்தாலும்..., அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், முதல்வரைப் பார்த்துவிட்ட வேறு இரண்டு மாணாக்கர்..., மிகவும் அமைதியாகி..., மெதுவாக மற்றவர்களையும் எச்சரித்தனர்!
சாந்தகுணமுள்ளவர்கள் மட்டுமே தேவனைக் காண முடியும் என்பதை தாவீது இங்கே அறிந்துணர்கிறார் (சங். 69:32). மோசே, பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவராய் இருந்தார்! (எண் 12:3). வேதத்திலே..., கர்த்தரை முகமுகமாய் அறிந்த ஒரே மனிதர் அவர் தான்! (உபா 34:12) நாம் எவ்வளவு தாழ்மையுடன் இருக்கிறோமோ..., அவ்வளவு நன்றாக, நம் தேவனை நம்மால் தரிசிக்க முடியும். நாம் எவ்வளவு அதிகமாக நம் தேவனைப் பார்க்கிறோமோ..., அவ்வளவாய் நாம் தாழ்மையுடன் இருப்போம்! இது ஒரு அற்புதமான உறவு. தேவனோடு நமக்குள்ள உறவை அளவிடுவதற்கு, மற்றவர்கள் பயன்படுத்துகிற மிக முக்கியமான வழிமுறைகளுள் ஒன்று..., நம் வாழ்க்கையின் மூலமாக நாம் வெளிப்படுத்துகிற தாழ்மை தான்.
நான் தேவனை எவ்வாறு தரிசிக்கிறேன்? அது எனக்குள் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
நான் தேவனை தரிசிப்பதாகக் கூறிக்கொண்டு..., மென்மேலும் தாழ்மையுடன் இருக்கவில்லை என்றால்..., நான் தேவனை தரிசிக்கிறதாக வெறுமனே பொய் சொல்கிறேன்!
ஜெபம்: கர்த்தாவே, ஒவ்வொரு நாளும், நான் உம்மை இன்னும் நன்றாக..., உண்மையாகவே... தரிசிப்பேனாக. ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment