எளியவர்களின் கதறல்

B.A. Manakala

கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார். கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார். சங். 69:33.

தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக..., அரசாங்கத்திடமிருந்து உதவி தேவைப்படும் மக்களை வகைப்படுத்த..., இந்திய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட திறன்மதிப்பீடே 'வறுமைக்கோடு' என்பதாகும். அதன்படி.., இந்திய மக்கள் தொகையில் 25% சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர்.

தேவன் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார் (சங். 69:33). ஐசுவரியவானுக்கும், ஏழைக்கும் இடையே, ஏதோ ஒன்று பொதுவாக உள்ளது. ஆம்! தேவனே அவ்விருவரையும் உண்டாக்கினார் (நீதி. 22:2). எனவே..., தேவன் அனுமதித்திருக்கிறபடியால் தான் அவ்விருவரும் இருக்கின்றனர். ஏழைகளுக்கும், ஒடுக்கப்படுகிறவர்களுக்கும், தேவன் காட்டுகிற சிறப்பான அக்கறை.., வேதம் முழுவதும் தெளிவாகத் தெரிகிறது (சங். 140:12). ஆயினும்..., நம்முடைய ஜெபங்களை தேவன் கேட்பதற்கு, நாம் ஏழைகளாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

தேவனில் விசுவாசமாய் இருக்கிறவர்கள், எப்போதும் ஆவிக்குரிய ஆகாரத்தின் தேவையை உணர முடியும். 'ஆவியில் எளிமை' (மத். 5:3) என்பது..., இன்னும் சிறப்பாக வளர்ந்து, ஆவிக்குரிய முதிர்ச்சியை அடைய வேண்டும் என்கிற நம்முடைய வாஞ்சையே தவிர வேறில்லை. ஆவிக்குரிய ரீதியாக நாம் எவ்வளவுதான் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலும்..., பூரணராக இருப்பதிலிருந்து..., நாம் இன்னும் வெகு தொலைவில் தான் உள்ளோம்.   

நான் ஆவிக்குரிய தேவையோடிருந்து..., என்னுடைய அத்தேவைக்காகக் கதறுகிறேனா?

நமது சரீர மற்றும் ஆவிக்குரிய தேவைகளைப் பற்றி நன்றாக அறிந்தவர் ஒரே ஒருவர் மாத்திரமே; அவரை நோக்கிக் கதறுவோமாக!

ஜெபம்: கர்த்தாவே, எளியவர்களின் கதறலைக் கேட்கக்கூடிய காதுகள் எனக்கும் இருப்பதாக. ஆமென்!

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்