வானமும் பூமியும் துதிக்கிறது!
B.A. Manakala
வானமும், பூமியும், சமுத்திரங்களும், அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது. சங். 69:34.
சமீபத்தில்..., நான் இணையவழியில் ஒரு மேஜை வாங்கினேன். அது வந்த பின்னர்..., அதனுடைய பாகங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட வேண்டியதாய் இருந்தது. எங்களுக்காக, குறைந்த கட்டணத்தில் அதைப் பொருத்தித்தர அந்த நிறுவனமே முன்வந்தாலும், நானாக அதை ஒருங்கிணைக்க வேண்டுமென மிகுந்த ஆவலாய் இருந்தேன். அதை இணைத்து முடிக்க சில மணி நேரங்கள் எனக்கு எடுத்துக்கொண்டாலும், அதை நானே பொருத்தி முடித்த போது...., அது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது.
தேவனுடைய எல்லாப் படைப்புகளும், தேவனைத் துதிக்கின்றன! (சங் 69:34). ஆனால்... உயிரற்ற ஜடப்பொருட்கள் எப்படித் துதிக்கின்றன...? ஆதியிலே தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டிக்கையில்..., ஒவ்வொரு நாளின் முடிவிலும், தான் படைத்த யாவையும் தேவன் நல்லது என்று கண்டார். அவர் செய்தவற்றில் அவர் இன்பம் கண்டார். ஒருமுறை இயேசு கல்லுகள் கூப்பிடுவதைப் பற்றிக் குறிப்பிட்டார் (லூக். 19:40).
தேவனின் படைப்புகளாக..., நாம் அவரை எப்போதும் துதிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறோம். உயிரற்ற ஜடங்களைப் போலல்லாது..., தேவனைத் துதிப்பதை நாம் அடிக்கடி தவற விடுகிறோம்.
தேவனைத் துதிப்பதில் நான் எப்படி இருக்கிறேன்?
தேவனுடைய சகல படைப்புகளும்..., எந்த நினைப்பூட்டல்களும் இல்லாமலேயே தேவனைத் துதிக்கின்றன; ஆனால்..., நமக்குத்தான் நினைப்பூட்டல்கள் தேவைப்படுகின்றன!
ஜெபம்: கர்த்தாவே, எஞ்சிய உம் படைப்புகளோடு சேர்ந்து, நானும் உம்மைத் துதிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment