அன்பும் கீழ்ப்படிதலும்

B.A. Manakala

அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள். சங். 69:36.

எனக்கு சமைப்பதில் அதிக ஆர்வம் கிடையாது! இருப்பினும்...., என்னுடைய குடும்பத்தை நான் நேசிப்பதாலும், அவர்களோடு அளவளாவ விரும்புவதாலும்..., வாரம் ஒருமுறை சமையலறைக்குள் சென்று சமைப்பதில் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன். என் மனைவியும், மகளும் சமைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஈடுபடுகிறார்கள். நான் அவர்கள் சமைப்பதனைத்தையும் ரசித்து உண்கிறேன். இது...., இன்னும் அதிகமாய் சமைப்பதற்கு அவர்களை ஊக்குவிக்கிறது. இப்படி நாங்கள் ஒன்றாக இருக்கிற நேரங்களை நாங்கள் விரும்புகிறோம். தேவனால் பூமியில் ஏற்படுத்தப்பட்ட என்ன ஆசீர்வதமான ஒரு உறவு இது!

அன்பும், கீழ்ப்படிதலும் ஒன்றோடொன்று இணைந்தே செல்கின்றன. வேறுவிதமாகக் கூறின், அன்புத் தாழ்ச்சியே கீழ்ப்படியாமைக்கான முக்கிய காரணம். தேவனுடனும், மனிதர்களுடனுமான  நம்முடைய உறவு...., அன்பால் பிணைக்கப்பட்டிருக்குமானால்...., சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், மற்றும் இச்சையடக்கம் ஆகியனவற்றோடும் அது சேர்ந்திருக்கும் (கலா. 5:22).

தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவரை நேசிக்கிறவர்களுக்கு உரிய சுதந்தரத்தையும், பாதுகாப்பையும் பற்றி தாவீது பேசுகிறார் (சங். 69:36). தேவன் மீதும், ஜனங்கள் மீதும் நம்முடைய அன்பு வளர்கிறதா என்பதைப் பரிசோதித்துப் பார்ப்பது மிகவும் முக்கியமானது.

தேவன் மீதும், பிறர் மீதுமான உங்களுடைய அன்பு எவ்வாறு வளர்ந்து வருகிறது?

தேவனுடைய அன்பில் வளர்வது தான்..., பிறரிடம் அதிக அன்பும் மரியாதையும் கொள்வதற்கான சிறந்த வழி!

ஜெபம்: கர்த்தாவே, உம் மீதும், பிறர் மீதுமுள்ள என் அன்பு, எப்போதும் உண்மையுள்ளதாய் இருப்பதாக. ஆமென்!

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்