தேவன் பெரியவர்!
B.A. Manakala
உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக. உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக. சங். 70:4.
'கிரிக்கெட் எங்கள் மதம்' .... என்பது ஏராளமான இந்தியர்கள் ஆரவாரித்துச் சொல்லும் பிரபலமான ஒரு கோஷம் ஆகும். விளையாட்டை விரும்புகிறவர்களும், அதன்மீது பைத்தியமாய் இருக்கிறவர்களும், இம்மாதிரியான ஒரு சுலோகத்தைப் பிடித்துக் கொள்வார்கள்.
'எனக்கு whatsapp பண்ணு', 'நான் busyயாக இருக்கிறேன்', 'என்னுடைய mobile phone', 'நாம் மகிழ்ந்திருப்போம்', 'எனக்கு வேலை கிடைத்து விட்டது'.... இது போன்ற சிலவற்றை, நம்முடைய சுலோகங்களாகக் கருத முடியுமா? நாம் அடிக்கடி என்ன பேசுகிறோமோ, அதில் இருந்தே..., நம்முடைய வாழ்க்கையின் கருப்பொருள் தெளிவாக விளங்கும்.
தேவனை மெய்யாகவே அறிந்தவர்களுக்கு, 'தேவன் பெரியவர்' என்பதே சிறந்த முழக்கமாகும். இதை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிக்கடி..., நாம் திரும்பத் திரும்ப சொல்லுகையில்..., அது நம்முடைய வாழ்க்கையிலும், நம்மைச் சுற்றி இருக்கிறவர்களின் வாழ்விலும் ஒரு தாக்கத்தை உண்டாக்கும்.
சிந்தித்துப் பார்த்தால்..., கடந்த ஒரு வாரத்தில், என்னென்ன சொற்றொடர்கள் எனது கோஷமாக இருந்திருக்கக் கூடும்?
நம்முடைய சொந்த முழக்கத்தை நாமே தீர்மானிக்க முடியும். நாம் விரும்புகிற போதெல்லாம் முழங்க..., அதைத் தெரிவு செய்யவும் முடியும்!
ஜெபம்: கர்த்தாவே, உம்மை மகிழ்விக்கிற ஒரு முழக்கமே எப்போதும் எனக்கிருப்பதாக. ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment