வெறும் ஏழையா? அல்லது தேவைமிகுந்தவரா?
B.A. Manakala
நானோ சிறுமையும் எளிமையுமானவன். தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும். நீரே என் துணையும், என்னை விடுவிக்கிறவருமானவர். கர்த்தாவே, தாமதியாதேயும். சங். 70:5.
பெதஸ்தா என்னும் குளத்தருகே, முப்பத்தெட்டு வருடங்களாக வியாதிப்பட்டிருந்த ஒரு மனிதன் கிடந்தான். தண்ணீர் கலக்கப்படுகையில்...., முதலில் குளத்திற்குள் இறங்குகிற யாராயினும்..., அவர் சொஸ்தமாவார். அவ்வழியாகக் கடந்து போன இயேசு..., அம்மனிதனிடம், "சொஸ்தமடைய வேண்டும் என்று நீ விரும்புகிறாயா?" என்று கேட்டார்.
ஏழையாக இருப்பது ஒரு நிலை என்றால், தேவையோடு இருப்பதென்பது மற்றொரு நிலை. நிச்சயமாக..., சுகமடைய வேண்டும் என்று விரும்பினதால் தான், அந்த மனிதன் அக்குளத்தருகே இருந்தான். ஆனால்..., இயேசு ஏன் அவனிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார் என்று நான் வியக்கிறேன். அவன் பல வருடங்களாக அங்கேயே இருந்தாலும் கூட...., ஒருவேளை அவன் ஏமாற்றமடைந்து, நம்பிக்கையற்றவனாய் மாறியிருந்திருக்கக் கூடும்.
நம்முடைய தற்போதைய நிலையிலேயே நாம் திருப்தியடைந்து விட்டால், அதற்கு மேல் நமக்கு ஒரு தேவையும் இல்லை. உண்மையில்..., பூமிக்குரிய பார்வையில், நமக்கு எப்போதும் தேவைகளுண்டு. நம்முடைய விருப்பங்கள் ஒருபோதும் முடிவடையாது. ஆனால்..., ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் பார்த்தால்..., அடிக்கடி நாம் மந்தமாகி, தேங்கி நின்று விடுகிறோம். ஆவிக்குரிய ரீதியாக, நாம் அதிகமாய்ப் பெறவும், அதிகமாய்க் கொடுக்கவும் வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.
நீங்கள் வெறுமனே வறியவரா? அல்லது தேவையோடு இருப்பவரா?
வறியோரைக் காட்டிலும், தேவையுள்ளோருக்குத் தான்... உதவி மிகவும் அருகில் உள்ளது!
ஜெபம்: கர்த்தாவே, ஆவிக்குரிய ரீதியாக...., நான் ஒருபோதும் திருப்தியடைந்தவனாய் இராமல், எப்போதும் தேவையுள்ளவனாய் இருப்பேனாக. ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment