நான் ஏன் தேவனிடம் வருகிறேன்?
B.A. Manakala
கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன். நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும். சங். 71:1.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர்..., நான் எனது கைபேசியை (Moblie phone), தொலைபேசி அழைப்புகளுக்காக மட்டுமே எடுப்பேன். ஆனால் இன்றோ...., வெறும் தொலைபேசி அழைப்புகளுக்காக மட்டுமல்லாது...., வேதத்தை வாசிக்கவும், எனது ஜெபக்குறிப்புகளைப் பார்க்கவும், செய்திகளை வாசிக்க, கேட்க அல்லது பார்க்கவும், பொழுதுபோக்குக்காகவும், வாகனத்தில் பயணிக்கையில் சரியான பாதையைக் கண்டறியவும், கால்குலேட்டராகவும் (Calculator), புகைப்படக்கருவியாகவும் (Camera), பதிவு செய்யும் கருவியாகவும் (recorder),... இன்னும் இது போன்ற பல்வேறு காரியங்களுக்காகவும் நான் என்னுடைய கைபேசியைப் பயன்படுத்துகிறேன். சுருங்கக் கூறின்..., இது என்னுடைய கணினி செய்யக்கூடியதைக் காட்டிலும் அதிகமாகச் செய்கிறது!
தேவனை அறிந்து கொள்கிறதினால் உண்டாகிற.... பாதுகாப்பு, மீட்பு, வெட்கப்பட்டுப் போகாத நிலை.... இன்னும் இது போன்ற பல்வேறு பலன்கள் பற்றி இந்த சங்கீதம் பேசுகிறது. மெய்யான தேவனை அறிகிறதினால் வரும் சில நன்மைகளை, நாம் கேட்டிருக்கலாம் அல்லது பெற்றிருக்கலாம். குறைந்த பட்சம்..., ஓர் நாள் நாம் பரலோகத்திற்குச் செல்லும் வரைக்கும்...., 'தேவனை அறிந்து கொள்கிறதினால் உண்டாகும் அனைத்து பலன்களையும்'..., நாம் உண்மையாகப் புரிந்து கொள்ள முடியும் என்று நான் நினைக்கவில்லை. தேவனிடமிருந்து வருகிற நிலையில்லாத ஆசீர்வாதங்களில், நாம் ஒருபோதும் திருப்தியடைந்துவிடாமல், எது நித்தியமானதோ அதில் கவனம் செலுத்துவோமாக.
காணப்படுபவற்றைப் பெற நான் தேவனிடம் செல்கிறேனா..? அல்லது காணப்படாதவற்றைப் பெறவா?
நமக்காய் தேவன் வைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் ஏராளம்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக..., அவற்றில் சிலவற்றை மட்டுமே நாம் விரும்புகிறோம்!
ஜெபம்: கர்த்தாவே, நான் எதைக் கேட்க விரும்புகிறேனோ, அதைக்காட்டிலும் அதிகமாய்..., நீர் எதைக் கொடுக்க விரும்புகிறீரோ, அதைப் பெற்றுக் கொள்ளவதற்கு உம்மிடம் வர எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment