விரைவான உதவி
B.A. Manakala
தேவனே, என்னை விடுவியும். கர்த்தாவே, எனக்குச் சகாயஞ் செய்யத் தீவிரியும். சங். 70:1.
இயேசுவுக்கு...., அவருடைய அருமை நண்பன் லாசரு வியாதியாய் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டும், இயேசு தாம் தங்கியிருந்த இடத்திலேயே அடுத்த இரண்டு நாட்களும் தங்கினார். அவர் போய்ச் சேர்ந்த வேளையில்..., லாசரு மரித்து, அவனுடைய சரீரம் கல்லறையில் வைக்கப்பட்டு, நாலு நாட்கள் ஆகியிருந்தது! அவனுடைய சகோதரி மார்த்தாள் இயேசுவிடம், "நீர் இங்கு இருந்திருந்தீரானால்..., என்னுடைய சகோதரன் மரித்திருக்க மாட்டான்" என்று கூறினாள்.
பொதுவாக....., தாவீது விரும்பியதைப் போலவே..., நமக்கும் நம்முடைய தேவைகளுக்கு விரைவான உதவி தேவைப்படுகிறது (சங். 70:1). தேவன் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார் (பிரச. 3:11). ஆனால், அவருடைய வேளை, நமது நேரத்தோடு எப்போதுமே பொருந்தி வராமல் போகலாம். சில சமயங்களில்..., அவர் நமக்குச் சரியான வேளையில் உதவி செய்யாதது போலத் தோன்றலாம். மனிதனுடைய கண்ணோட்டத்தில் பார்த்தால்..., 'இயேசு தாமதமாக வந்ததால் தான் அவளுடைய சகோதரன் மரித்துப் போனான்' என்று மார்த்தாள் சொன்னது சரியே! அநேகமாக..., அவளுடைய சகோதரன் உயிர்ப்பிக்கப்பட்ட பின்னர், தேவனுக்குச் சரியான வேளை அது தான் என்பதை அவள் புரிந்திருப்பாள். உண்மையைக் கூறின்..., பிரச்சனையின் நேரங்களில் உதவுவதற்கு, தேவன் எப்போதுமே ஆயத்தமாய் இருக்கிறார் (சங். 46:1). அவர் எப்பொழுதும் நம்முடனே கூட இருக்கிறார் (மத். 28:20).
'தேவனுடைய பிரசன்னம், இடைவிடாமல் என்னோடே கூட இருக்கிறது'... என்பதை, எனக்கு நானே எப்படி நினைவூட்டிக் கொள்வது?
தேவனோடு பணியாற்றும் போது..., அவரைப் போலவே... 'காலத்தை' வரையறுக்கக் கற்றுக்கொள்வது நல்லது!
ஜெபம்: கர்த்தாவே, நீர் என்னுடன் செய்யும் அனைத்திற்கும் இருக்கிற..., உம்முடைய நேர்த்தியான சமயத்தைப் புரிந்து கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment