எனக்குச் செவிசாய்க்கும் செவி!
B.A. Manakala
உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும். உமது செவியை எனக்குச் சாய்த்து என்னை இரட்சியும். சங். 71:2.
சமீபத்தில்..., ஒரு முதியவருடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்குக் கிட்டத்தட்ட காது கேட்கவில்லை. நான் அவரோடு பேசின போதெல்லாம்..., அடிக்கடி அவர் தனது வலது கையை தன் வலது காதுக்குப் பின்னால் வைத்து, என்னிடமாய் தன் செவியை சாய்த்துக் கொண்டு..., நான் பேசியதை மறுபடியும் கூறும்படி என்னிடம் கேட்டார். அவருடன் நான் மிகவும் உரத்த தொனியில் பேச வேண்டியதாய் இருந்தது.
தான் மீட்கப்படவும், காக்கப்படவும் விரும்பினதால்..., தேவனுடைய செவியை தன்னிடமாய் திருப்புவதற்காக... சங்கீதக்காரருடைய ஜெபம் இருந்தது (சங். 71:2). நம்முடைய கூப்பிடுதலைக் கேட்கக் கூடாதபடிக்கு தேவனுடைய செவி மந்தமாகவில்லை (ஏசா. 59:1). அவரைத் தொழுதுகொண்டு, அவருடைய சித்தத்தைச் செய்கிறவர்களுக்கு, அவர் செவிகொடுக்கிறார் (யோவா. 9:31).
நான் கோபமாயிருந்து, அபத்தமானவற்றைப் பேசுகையில்..., கர்த்தர் என்னிடமாய்த் தன் செவியைச் சாய்க்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன்!
கர்த்தர் என்னிடமாய்த் தன் செவியைச் சாய்க்கையில்..., அவர் என்ன கேட்கிறார்?
எப்போதும் கர்த்தரே உங்களிடமாய்த் தம் செவியை சாய்க்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்; நீங்களும் அவருக்குச் செவிசாயுங்கள்!
ஜெபம்: கர்த்தாவே, தயவுகூர்ந்து நான் சொல்வதைக் கேட்டருளும். நானும் உமக்குச் செவிகொடுப்பேனாக. ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment