மலைகளில் செழிப்பு
B.A. Manakala
பர்வதங்கள் ஜனத்திற்குச் சமாதானத்தைத் தரும். மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும். சங். 72:3.
நான் சமவெளியில் பிறந்து வளர்ந்தேன். ஏதோ சில காரணங்களுக்காக..., அந்தப் பகுதியில் உள்ள சின்ன குன்றுகள் கூட, பயனற்ற நிலங்களாகக் கருதப்பட்டு, பயிர்செய்வதற்கு பயன்படுத்தப்படுவதில்லை.
சில சமயம், நம்முடைய பார்வைக்குக் கடினமான இடங்களாகக் காணப்படுகின்ற... மலைகளையும், குன்றுகளையும் செழிப்பாக்கி..., பலன் தரச் செய்ய தேவனால் முடியும் (சங். 72:3). பல வருடங்கள், மலைகளில் வசிப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆனால்..., அந்த மலைகள்..., பழங்கள், காய்கறிகள் மற்றும் பயிர்வகைகளால் நிறைந்து, செழிப்பாய் இருந்தன. தேவனோடிருக்கையில்..., இருளில் வெளிச்சமும், நம்பிக்கையற்ற நிலையில் நம்பிக்கையும், சுகவீனத்தில் சுகமும், மலைகளில் கூட செழிப்பும் உண்டு.
நிலத்தில் கடினமாக உழைத்து (நீதி 12:11), அதைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு (ஆதி. 2:15) நமக்கு உள்ளது. இது செழிப்புக்கு முக்கிய பங்களிக்கிறது. நம்மை இன்னும் செழித்தோங்கச் செய்வதற்காக, தேவன் நம்மோடு இணைந்து உழைக்க விரும்புகிறார்.
செழிப்பை நோக்கி வளர்கிறதில், என் பங்கைச் செய்ய நான் விரும்புகிறேனா?
தேவனோடு கடினமாக உழைக்கிறவர்களுக்கு, செழிப்பு காத்திருக்கிறது; சோம்பேறிகளுக்கோ..., இது வெறும் கனவாகவே உள்ளது.
ஜெபம்: கர்த்தாவே, நீர் விரும்புகிற வண்ணம் நான் செழித்தோங்கத் தக்கதாக, உம்மோடுகூட கடினமாய் உழைக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment