ஏழைகளைப் பாதுகாருங்கள்

B.A. Manakala

ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவர்களை நொறுக்குவார். சங். 72:4.

ஒருமுறை, இயேசு தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டிக்கு அருகே உட்கார்ந்திருந்தார். அநேக தனவான்கள் வந்து ஏராளம் பணத்தை அதில் போட்டாலும் கூட, இயேசுவோ...., இரண்டு சிறிய காசுகளைப் போட்ட ஒரு ஏழை விதவையையே ஆவலுடன் கவனித்தார். இயேசுவைத் தவிர அங்கிருந்த வேறொருவரும் அவளை கவனித்திருக்க மாட்டார்கள்.

ஏழைகளுக்கு நாம் செய்யக்கூடிய மூன்று காரியங்களைப் பற்றி சங்கீதக்காரர் கூறுகிறார்: 1) பாதுகாத்தல். 2) மீட்டல். 3) ஒடுக்குபவர்களை நொறுக்குதல். (சங் 72:4). ஏழைகளுக்காக நிற்பதற்கு எல்லாருக்கும் மனம் இருக்காது. ஆனால் நாம் மெய்யாய் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களானால், நமக்கு அவர்களுக்கு உதவும் இதயம் வேண்டும். தேவையுள்ளவர்களின் விஷயத்தில் நாம் எதுவுமே செய்யாதிருந்தால், நாம் நிம்மதியற்று உணர்வோம். ஏழைகளுக்கான நீதியும், உரிமைகளும், அடி‌க்கடி அவர்களுக்கு  மறுக்கப்படுகின்றன. ஏராளமானோர், மிகவும் தரித்திரராய்..., தங்கள் வாழ்வாதாரத்திற்குப் பிறரிடம் இருந்து உதவி தேவைப்படுகிறவர்களாய் உள்ளனர். பொல்லாங்கரின் பிடியில் இருந்து அவர்களை மீட்பதற்கு, யாரேனும் ஒருவர் அவர்களுக்குத் தேவைப்படுகிறார் (சங். 82:3-4). தரித்திரரை ஒடுக்குகிறவன் அவர்களை உண்டாக்கினவரை நிந்திக்கிறான் (நீதி. 14:31).

ஏழைகள் எனக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை நான் கண்டுணர்கிறேனா?

நாம் ஏழைகளை போஷிக்கையில், தேவனை போஷிக்கிறோம்; நாம் ஏழைகளைப் பாதுகாக்கையில், தேவன் மகிழ்கிறார்.

ஜெபம்: கர்த்தாவே, ஏழைகளின் தேவைகளை நான் காணத்தக்கதாக, என் கண்களைத் திறந்தருளும். ஆமென்!

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்