புத்துணர்வூட்டும் ஆளுகை
B.A. Manakala
புல்லறுப்புண்ட வெளியின் மேல் பெய்யும் மழையைப் போலவும், பூமியை நனைக்கும் தூறலைப் போலவும் இறங்குவார். சங். 72:6.
இந்தியாவில் உள்ள விவசாயிகள்..., நிலத்தின் உழவுக்கும், அறுப்புக்கும் இடையேயான பல்வேறு கால கட்டங்களில்..., மழைக்காகக் காத்திருக்கின்றனர். சில சமயங்களில், நெடுங்காலமாக... அவர்கள் மழைக்காய் ஏங்கி, தவமாய் தவமிருந்து காத்துக் கிடக்கின்றனர். கடைசியில்...., ஒருவழியாக மழை பெய்கின்ற போது, அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு, நன்றியுடன் இருக்கின்றனர். மழையானது...., அவர்களுடைய விவசாயத்திற்கு மிகப் பெரிய வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது.
ராஜாவின் ஆளுகை, புல்லறுப்புண்ட வெளியின் மேல் பெய்யும் மழையைப் போலவும், பூமியை நனைக்கும் தூறலைப் போலவும் இருக்க வேண்டும் என்பது சங்கீதக்காரரின் ஜெபமாய் இருக்கிறது (சங். 72:6). 'பூமியிலுள்ள வம்சங்களுக்கெல்லாம் ஆசீர்வாதமாக இருப்பான்'.... என்பதே தேவன் ஆபிரகாமுக்கு அருளிய வாக்குத்தத்தம் (ஆதி. 12:3). இது...., 'பூமிக்கு உப்பாகவும்' 'உலகுக்கு வெளிச்சமாகவும்' இருப்போம் என்று நம்மைப் பற்றி இயேசு கூறியதற்கு ஒத்திருக்கிறது.
நாம் நம்முடைய பேச்சிலும், நடத்தையிலும், ஆளுமையிலும், புத்துணர்ச்சி அளிக்கிறவர்களாய் இருக்கிறோமா?
புத்துணர்வூட்டும் பரலோக ஆளுகையின் கீழ் நாம் இருக்கையில்..., நாமும் பிறருக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறோம்.
ஜெபம்: கர்த்தாவே, என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவருக்கும், நான் எப்போதும் புத்துணர்ச்சி அளிப்பேனாக. ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment