எங்கும் எப்போதும் ஆளுகை!
B.A. Manakala
அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான். சந்திரனுள்ள வரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு சமுத்திரந் தொடங்கி, மறு சமுத்திரம் வரைக்கும், நதி தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர் அரசாளுவார். சங். 72:7,8.
பள்ளிப்பருவ நாட்களில்..., சில நண்பர்கள்..., "நான் எப்போதும் உன்னுடைய நண்பனாக இருப்பேன்". "நான் ஒருபோதும் உன்னை மறக்க மாட்டேன்"... என்றெல்லாம் வாக்களிப்பது வழக்கம். ஆனால்... பெரும்பாலானோரின் விஷயத்தில்..., பள்ளியை விட்டு வெளியேறிய நாளிலிருந்து இன்று வரை... நான் அவர்களைப் பார்க்கவே இல்லை. அவர்களில் ஒருவருடனும் தொடர்பிலும் இல்லை!
இந்த வசனங்களில்.., சாலொமோனின் ஆளுகை, சந்திரனுள்ள வரைக்கும் இருக்க வேண்டும் என்றும், பூமியின் எல்லைகள் வரைக்கும் செல்ல வேண்டும் என்ற விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது (சங். 72:7,8). 'எங்கும்', 'என்றென்றும்' ஆகிய வார்த்தைகளுக்கு நித்திய விளைவு உண்டு. எந்த மனிதனாலும் அல்லது ராஜாவாலும் எல்லா இடங்களையும் சென்றடையவோ, பூமியில் என்றென்றைக்கும் ஆளுகை செய்யவோ... ஒருபோதும் முடியாது! கர்த்தர் சதா காலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரீகம் பண்ணுவார் (யாத். 15:18). இயேசுகிறிஸ்து சதா காலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் (வெளி. 11:5). அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அவரோடேகூட என்றென்றும் அரசாளுவோம் (தானி. 7:27)!
ஆனாலும்..., நமக்கு ஏற்கனவே 'ராஜரீக ஆசாரியக்கூட்டம்' என்ற அந்தஸ்து இருக்கிறது என்பதையும், அது இந்த பூமியில்... அவருடைய புண்ணியங்களை அறிவிக்கும் படிக்கு நம்மை அழைக்கிறது (1 பேது. 2:9) என்பதையும் நாம் மறந்து விடாதிருப்போமாக.
எல்லா இடங்களிலும், எப்போதும், தேவனுடைய புண்ணியங்களை பிரதிபலிக்க என்னால் முடிகிறதா?
ஜெபம்: கர்த்தாவே, நான் உம்முடைய புண்ணியங்களை எங்கேயும், எப்போதும் பறைசாற்றுவேனாக. ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment