சகல ராஜாக்களும் பணிவார்கள்!

B.A. Manakala

சகல ராஜாக்களும் அவரைப் பணிந்து கொள்வார்கள். சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள். சங். 72:11.

ஒருமுறை..., ஜன நெருக்கடி நிறைந்த ஒரு சாலையை நான் கடந்து செல்கையில்...., அவ்வழியே கடந்து சென்ற பெரும்பாலான ஜனங்கள்..., ஓர் இடத்தில் நின்று, குறிப்பிட்ட ஒரு பக்கமாகத் திரும்பி, ஒரு விநாடி தலை குனிந்து வணங்கி, பின்னர் தங்கள் வழியே செல்வதை நான் கவனித்தேன். அந்தப் பக்கத்தில் ஒரு கோயில் இருந்ததை நான் உணர்ந்து கொள்ள, எனக்குச் சிறிது நேரம் பிடித்தது.

மேலுள்ள கரு வசனத்தில் விரும்புவது போலவே, பல்வேறு தேசங்களிலுமிருந்து ராஜ்யப்பிரதிநிதிகள், சாலொமோனின் ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள் (1 இரா. 4:34). சாலொமோன் மிகச்சிறந்த ஞானியாகக் கருதப்பட்டாலும், ராஜாதி ராஜாவாக இருக்கிறவர் ஒருவர் மாத்திரமே (வெளி. 17:14). ஒரு நாள், முழங்கால் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும் (ரோம. 14:11). எனினும், இயேசுவின் மூலமாய், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பற்றியும் மறந்து விடாதிருங்கள். மேலான அதிகாரமுள்ளவரோடு கூட நாம் வீற்றிருக்கிறோம். நம்மைச் சுற்றிலும், நாம் காண்கிற சகல அந்தகார வல்லமைகள் மேலும் நமக்கு அதிகாரம் உள்ளது. ஓர் நாள்..., நாம் இந்த உலகத்தையே அரசாளுவோம் (1 கொரி. 6:2).

என்னுடைய அதிகாரத்தை நான் செயல்படுத்துகிற வேளையிலும், ராஜாதி ராஜாவுக்கு நான் தலை வணங்குகிறேனா?

இயேசுகிறிஸ்து மூலமாய், நமக்கு இருக்கிற அதிகாரத்தைக் குறித்துப் பெருமிதம் கொள்ளுங்கள்; ஆனாலும்..., பெருமையைப் புறந்தள்ளுங்கள்.

ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை நான் உணர்கிற வேளையிலும்எப்போதுமே நான் உமக்கு அடிபணிவேனாக. ஆமென்!

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்