இரங்கி, இரட்சியுங்கள்
B.A. Manakala
பலவீனனுக்கும், எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். சங். 72:13.
ஒரு தடவை..., ஒரு மனிதன் திருடர்களால் தாக்கப்பட்டு, காயப்பட்ட நிலையிலே..., குற்றுயிராய்.., தன்னந்தனியே சாலையில் விடப்பட்டான். அவ்வழியாக வந்த ஒரு மதகுரு, அவனைக் கண்டும், விலகிப் போய்விட்டார். பின்னர் வந்த ஆலயப் பணியாளன் ஒருவன், அந்த மனிதனைக் கண்டு..., அவனும் தன் வழியே போய்விட்டான். பின்பு, அப்பக்கமாக வந்த கனிவுள்ள ஒரு மனிதன்..., காயப்பட்டுக் கிடந்த மனிதனுக்கு முதலுதவி செய்து, அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அம்மனிதனின் முழு சிகிச்சைக்கும் உரிய தொகையை, தான் தந்து விடுவதாகவும் வாக்களித்தார்.
ஒருவருடைய நிலையைக் கண்டு பரிதாபம் கொள்வது ஒரு விஷயம் என்றால், அச்சூழ்நிலையில் இருந்து அவர்களை மீட்டெடுப்பது மற்றொரு காரியம். பல ஜனங்கள்...., ஏழைகள் மற்றும் தேவையில் உள்ளவர்களுக்காகப் பரிதாபப்படுவர். ஆனால், வெகு சிலரே அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்குவர். மேலுள்ள வசனம்..., ஏழைகள் மீது இரக்கங்கொள்வது, மற்றும் அவர்களை இரட்சிப்பது என்ற இரண்டைப் பற்றியும் பேசுகிறது (சங். 72:13).
வறியவருக்காக, வெறும் பரிதாபம் மட்டுமே கொள்கிறேனா... அல்லது, முடிகிற போதெல்லாம் அதில் செயல்படுகிறேனா?
ஏழைகளுக்காக நாம் பரிதாபப்படுகிறோமென்றால்..., அது நல்லது. அவர்களை மீட்டெடுக்க, நாம் ஏதாவது செய்ய முடியுமென்றால்..., அது இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஜெபம்: கர்த்தாவே, உம்மைப் போல இரக்கங்கொள்ளவும், செயல்படவும்..., உமக்குள்ளதைப் போன்ற இருதயம் எனக்கு இருப்பதாக. ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment