வறியோர் அவருக்கு விலையேறப்பெற்றோர்
B.A. Manakala
அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும், கொடுமைக்கும் தப்புவிப்பார். அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும். சங். 72:14.
வெகு நாட்களுக்கு முன்னதாக..., நான் ஒரு திருமண விருந்திலே கலந்து கொண்டேன். வழக்கம் போல, பங்கேற்ற அனைவரும் நேர்த்தியான உடையணிந்திருந்தனர். உணவு வேளையின் போது, அவர்கள், தங்களுடைய விறுவிறுப்பான உரையாடலில் ஈடுபட்டிருந்தனர். அனைவரும் இல்லாவிட்டாலும்..., பெரும்பாலான மக்கள், தங்களுக்கு வைக்கப்பட்ட உணவை சாப்பிடுவதிலேயே குறியாய் இருந்தனர். ஆனால், பங்கேற்றவர்களுள் ஒருவர், விருந்து மண்டபத்தின் வெளியே நின்றிருந்த பிச்சைக்காரர் ஒருவருக்கு, உணவு வழங்குவதை நான் கவனித்தேன். அந்தப் பிச்சைக்காரர், அவ்வுணவை ரசித்து, ருசித்துப் புசித்ததை நான் கண்ட போது, இதற்கு முன்னர் இந்தப் பிச்சைக்காரருக்கு இப்படிப்பட்ட ஒரு உணவு கிடைத்திருக்குமா என நான் வியந்தேன்.
ஏழைகள், நம் தேவனுக்கு விலையேறப்பெற்றவர்கள். அதனால் அவர்களை வஞ்சகத்திற்கும், கொடுமைக்கும் அவர் விலக்கி மீட்கிறார் (சங். 72:13-14). அநேகமாக நாம், குறிப்பிட்ட அந்தஸ்தில் உள்ள மக்களோடு மட்டுமே தொடர்பு வைத்திருப்பதை வழக்கமாய் கொண்டிருக்கிறோம். பிரபலங்கள் ஏழைகளைப் புறக்கணிக்கின்றனர். ஒருமுறை, இயேசு..., தேவபக்தியுடைய, செல்வந்தனான ஒரு மனிதனிடம், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடுக்கும்படி கூறினார் (மத். 19:21). நம் வீட்டின் மதிய உணவுக்கு, உறவினர்களையும், பணக்கார அயலகத்தாரையும் அழைப்பதற்கு மாறாக, ஏழைகளை அழைப்பதற்கு அவர் பரிந்துரைக்கிறார் (லூக். 14:12-13). ஏழைகளுக்காக, நாமும் அவருடைய இதயத்தைப் போலவே கொண்டிருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
ஏழைகளை விலைமதிப்புள்ளவர்களாய் கருதுகிற விஷயத்தில்..., நான் எப்படி இருக்கிறேன்?
கர்த்தர் விலையேறப்பெற்றதாய் கருதுகிறதை நாமும் விலையேறப்பெற்றதாய்க் கருத முடியுமென்றால்..., அது மிகவும் சிறப்பானது.
ஜெபம்: கர்த்தாவே, ஏழைகள் மீது அக்கறை கொள்ள எனக்குக் கற்றுத் தாரும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment