ராஜா நீடூழி வாழ்க!
B.A. Manakala
அவர் பிழைத்திருப்பார். ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும். அவர் நிமித்தம் இடைவிடாமல் ஜெபம் பண்ணப்படும். எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார். சங். 72:15.
'Le Roi est mort , Vive le Roi!' என்ற பிரஞ்சு சொற்றொடருக்கு, ' ராஜா இறந்து விட்டார்', 'ராஜா நீடூழி வாழ்க!' என்று அர்த்தம். இது, 1461ம் வருடம் சார்லஸ் VIIம் மன்னர் இறந்த போது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 'ராஜா வாழ்க' அல்லது 'தேவன் ராஜாவைக் காக்கட்டும்' ஆகிய பதங்கள் பல முறை வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது (1 சாமு. 10:24, 2 சாமு. 16:16).
மெத்தூசலா 969 வருடங்கள் வாழ்ந்தார் (ஆதி. 5:27). ஆனால்..., இன்றைக்கு 100 வருடங்கள் வரை வாழ்கிற எவரையேனும் காண்பதே அரிதாய் இருக்கிறது. 'ராஜா நீடூழி வாழ்க' என்று சாலொமோன் வாழ்த்தப்பட்டாலும் கூட, 80 வருடங்களுக்கு மேல் அவர் வாழ்ந்ததாகத் தெரியவில்லை! நீடித்த ஆயுள் என்பது ஒரு ஆசீர்வாதம் எனினும், 'எவ்வளவு நீண்ட காலம் நாம் இவ்வுலகில் வாழ்கிறோம்' என்பது உண்மையில் ஒரு பொருட்டல்ல. அந்த வாழ்வைக் கொண்டு, இவ்வுலகில் நாம் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். நாம் பிறந்தவுடன்தானே, நாம் நித்தியவாசிகள் ஆகிறோம். இஜ்ஜீவிய காலத்திலேயே.., நம்முடைய நித்தியத்தை நாம் எங்கு கழிக்கப்போகிறோம்.... என்பதையும் நாம் தெரிவு செய்கிறோம். இப்பூவுலகில் நாம் அனைவரும் நீடித்து வாழ்வோமாக. அதைவிட முக்கியமாக.., நம்முடைய நித்தியத்தை தேவனோடு செலவிடும்படி தெரிவு செய்வோமாக.
தேவனோடு யுகா யுகமாய் வாழ்வதற்கு நான் ஆயத்தமாகி விட்டேனா?
நித்திய வாழ்வு என்பது நித்திய தேவனிடமிருந்து மட்டுமே வருகிற ஒரு ஈவு. ஒருவரும் தாமாகவே அப்படி வாழ முடியாது; வேறு எவரையும் நித்தியமாக வாழ வைக்கவும் முடியாது.
ஜெபம்: கர்த்தாவே, ஒவ்வொரு மனிதனுக்கும், உம்மோடு நித்தியத்தைக் கழிக்க வேண்டும் என்ற வாஞ்சை இருப்பதாக. ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment