சகல ஜாதிகளும் அவர் மூலம் ஆசீர்வதிக்கப்படல்

B.A. Manakala

அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும். சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும். மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். எல்லா ஜாதிகளும் அவரை பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள். சங். 72:17.

கணக்கு ஆசிரியர், வகுப்பில் உள்ளவர்களுக்கு ஒரு கணக்கைக் கொடுத்தார். மாணாக்கர் எல்லாரும் மிகவும் கஷ்டப்பட்டு, நெடு நேரமாக, அக்கணக்கிற்கான விடை காண முயன்றனர். கடைசியில்..., அவர்களுள் ஒரு புத்திசாலி மாணவன் விடையைக் கண்டுபிடித்து விட்டான். ஆசிரியர், மற்ற மாணவர்களை ஒவ்வொருவராக அவனிடம் அனுப்பி, எப்படி அந்த கணக்கைச் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்ளச் செய்தார்.

'எல்லா தேசங்களும் அவர் மூலமாய் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்' என்று வாஞ்சிப்பது என்ன அழகான ஓர் விருப்பம் (சங். 72:17). தேவன் ஆபிரகாமை பூமியிலுள்ள சகல ஜாதிகளுக்கும் ஆசீர்வாதமாய் இருக்கும்படி செய்தார் (ஆதி. 22:18). நம்மை சபிக்கிறவர்களையும் கூட நாம் ஆசீர்வதிக்க வேண்டும் (லூக். 6:28). ஒரு பிரச்சனையை நாமாகவே தீர்த்துவிட்டால், நம்மைச் சுற்றியுள்ள மற்ற ஒவ்வொருவருக்கும் அதே பிரச்சனையைத் தீர்க்க, எளிதாக உதவிடலாம்.  பரத்திலிருந்து நாம் பெறுகிற ஆசீர்வாதத்தின் மூலம் மட்டுமே, அப்படிப்பட்ட ஓர் ஆசீர்வாதத்தின் பாத்திரங்களாக நாம் திகழ முடியும்.

நம் மூலமாய் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற வாஞ்சை நமக்கு உள்ளதா?

தேவனையும், பிறரையும் பிரியப்படுத்துவதற்கான சிறந்த வழி, ஓர் ஆசீர்வாதமாய் திகழ்வதே!

ஜெபம்: கர்த்தாவே, எல்லா தேசங்களும் என் மூலமாக ஆசீர்வதிக்கப்படுவதாக. ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்