மகிமை பொருந்திய நாமம்!
B.A. Manakala
அவருடைய மகிமை பொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்! சங். 72:19.
எனக்கு ஒரு நண்பர் உண்டு. அவருடைய பெயர் 'குளோரியஸ்' (Glorious). முதன்முறையாக அவருடைய பெயரை நான் கேட்ட போது, நான் சரியாகத் தான் காதில் வாங்கினேனா என்பதை, அவரிடம் நான் மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியதாய் இருந்தது. என் நண்பர் குளோரியசை சந்தித்து, அவரோடு பேசியதை நான் கெளரவமாகக் கருதினேன்.
என்றென்றும் சகல துதிக்கும் பாத்திரமாய் இருக்கிற, மகிமை பொருந்திய நாமத்தை உடைய ஒருவர் நமக்கு உண்டு (சங். 72:19). தனது இயற்பெயர், நல்ல அர்த்தமுடையதாக இல்லாததால், வளர்ந்தவுடன் தன் பெயரை மாற்றிக் கொண்ட ஒரு நண்பனை நான் அறிவேன். தேவன் தாமும், சில சமயங்களில், ஜனங்களின் பெயரை மாற்றினார்: 'ஆபிராம்' என்பதை 'ஆபிரகாம்' என்றும், 'சாராய்' என்பதை 'சாராள்' என்றும், 'யாக்கோபு' என்ற பெயரை 'இஸ்ரவேல்' என்றும் மாற்றினார். என்னுடைய பெயருக்கு ஏதாவதொரு மொழியில் அர்த்தம் இருக்கிறதா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. எனக்குப் பெயரிட்ட போது, ஏதேனும் அர்த்தத்தோடு, திட்டமிட்டே எனக்குப் பெயரிட்டார்களா என்பதை என் பெற்றோர் என்னிடம் சொல்லவில்லை.
தேவன் உங்கள் பேரைப் பெருமைப்படுத்துவார் (ஆதி. 12:2). பூமியில் உங்கள் பெயர் என்னவாக இருந்தாலும், அவர் உங்கள் பெயரை அவருடைய உள்ளங்கைகளில் எழுதி வைத்திருக்கிறார் (ஏசா. 49:16).
அவருடைய மகிமை பொருந்திய நாமத்தினிமித்தம், எனக்குச் சிறந்த பெயர் கிடைத்திருக்கிறதை நான் உணர்கிறேனா?
நம்முடைய பெயர்கள் என்னவாக இருந்தாலும்..., ஒரே ஒரு நாமத்தின் மூலமாக மட்டுமே அவை அர்த்தமுள்ளவையாக மாற்றப்பட முடியும்.
ஜெபம்: கர்த்தாவே, என்னுடைய பெயருக்கு, நீர் அளித்துள்ள உண்மையான மதிப்பையும், அர்த்தத்தையும் நான் புரிந்து கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment