தேவன் நல்லவர்!
B.A. Manakala
சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்குத் தேவன் நல்லவராகவே இருக்கிறார். சங். 73:1.
என்னுடைய நண்பர்களுள் ஒருவன் என்னிடம், "அந்த ஆசிரியர் மிகவும் நல்லவர்" என்று எங்கள் ஆசிரியர்களுள் ஒருவரைப் பற்றிக் கூறினான். ஆனால், இன்னொரு நண்பனோ, அதே ஆசிரியரைப் பற்றி அதற்கு நேர்மாறாக, "அந்த ஆசிரியர் மிகவும் மோசமானவர்" என்று என்னிடம் கூறினான். ஒரே ஆசிரியரைப் பற்றின இந்த அறிக்கைகள் ஏன் மாறுபட்டு இருக்கின்றன என்பதை நாம் எல்லாருமே யூகிக்கக் கூடும்.
இங்கே ஆசாப், 'தேவன் இஸ்ரவேலுக்கு நல்லவர்' என்று கூறுகிறார் (சங். 73:1). ஆனால், இந்த இஸ்ரவேல் ஜனங்கள், அவர்கள் விரும்பாத கடினமான நேரங்களை பூமியில் எதிர்கொள்ள நேர்ந்த போது, எத்தனை முறை தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
நம் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்கிறதாலோ, எல்லாவித ஆபத்துக்களுக்கும் நம்மை விலக்கிக் காக்கிறதாலோ, நமக்கு நூறு வயதாகிற வரை, நம்மை இந்த உலகில் உயிரோடு வைப்பதாலோ மாத்திரம் தேவன் நல்லவராக இராமல்..., உண்மையுள்ளவராகவும், நாம் இப்பூவுலகில் எதை எதிர்கொள்ள நேர்ந்தாலும், நம்மை மறுகரைக்கு அழைத்துச் செல்லக்கூடியவராய் அவர் இருக்கிறபடியாலும், அவர் நல்லவராய் இருக்கிறார்.
என் வாழ்வில், தேவனை நல்லவராக... நான் எங்ஙனம் அனுபவிக்கிறேன்?
நாம் ஆவலுடன் வாஞ்சித்தால், நம் அனைவரையும் நல்லவர்களாக்க, தேவனுடைய நற்குணம் போதுமானதாய் உள்ளது.
ஜெபம்: கர்த்தாவே, நீர் எவ்வளவு நல்லவர் என்பதை ஒவ்வொரு நாளும் இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள, எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment