நீண்ட காலத்திற்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டோம்!

B.A. Manakala

நீர் பூர்வ காலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக் கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும். சங். 74:2.

நான் மிகவும் சிறுவனாக இருந்த போது..., என்னுடைய கொள்ளுப் பாட்டியம்மா, அவர்களுடைய பள்ளிப்பருவத் தோழியைப் பற்றியும்..., எப்படி அவர்கள் இருவரும் ஒன்றாக பள்ளிக்குச் செல்வார்கள், எப்படி ஒன்றாக விளையாடுவார்கள் என்பதைப் பற்றியெல்லாம் என்னிடம் கூறுவார்கள். 1980களில் தனது 96வது வயதிலே அவர்கள் மரித்துப் போனார்கள். ஒரு சிறுவனாக..., எத்தனை வருடங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் இளம் பெண்களாக இருந்து..., ஒன்றாக விளையாடினார்கள்.. என்பதை, அப்போது என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், இன்று நான் கற்பனை செய்து பார்த்தால்...., அது ஒரு 130 ஆண்டுகால பழங்கதை!

'தேவ ஜனங்கள் நீண்ட காலத்திற்கு முன்பாகவே அவரால் தெரிந்து கொள்ளப்பட்டார்கள்' என்பதை சங்கீதக்காரர் தேவனுக்கு நினைவுபடுத்த முயற்சிக்கிறார் (சங். 74:2). தேவனுக்கு இதுபோன்ற நினைவூட்டல்கள் தேவைப்படுகின்றனவா? உண்மை என்னவென்றால்..., 'உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே நாம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்' (எபே. 1:4) என்பதைப் பொதுவாக நாம் தான் மறந்து விடுகிறோம் என்று நினைக்கிறேன். அதைப்பற்றி, தேவன் தான் பலமுறை நமக்கு பல்வேறு வழிகளில் நினைவுபடுத்த வேண்டியதாய் இருக்கிறது. தேவன் நமக்கு நினைவூட்டும் போது தான், தேவனுக்கு நினைவுபடுத்த நமக்கு ஞாபகம் வருகிறது!

எவ்வளவு நீண்ட காலத்துக்கு முன்னர் தேவன் என்னைத் தெரிந்து கொண்டார்.... என்பதை நான் அறிந்திருக்கிறேனா?

'நீண்ட காலத்திற்கு முன்'... மற்றும் 'இப்போது'.... ஆகிய இரண்டிற்கும் இடையிலான காலம் என்பது..., ஒருபோதும் தேவனுக்கும், நமக்கும் ஒரே மாதிரியாக இருக்காது!

ஜெபம்: கர்த்தாவே, நீர் என்னை நீண்ட காலத்திற்கு முன்பே தெரிந்து கொண்டீர் என்பதை... இன்னும் சிறப்பாக ஒவ்வொரு நாளும் புரிந்து கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்