தேவன் உலாவட்டும்...

B.A. Manakala

நெடுங்காலமாக பாழாய்க் கிடக்கிற ஸ்தலங்களில், உம்முடைய பாதங்களை எழுந்தருளப் பண்ணும். பரிசுத்த ஸ்தலத்திலே, சத்துரு அனைத்தையும் கெடுத்துப் போட்டான். சங். 74:3.

என்னுடைய பள்ளி நாட்களின் கூச்சல் மிகுந்த வகுப்பறைகளை..., மலரும் நினைவுகளாய் இன்னும் நான் நினைவுகூர்கிறேன். எப்பொழுதெல்லாம் முதல்வர் உள்ளே நுழைகிறாரோ..., அப்போதெல்லாம் அங்கு நிலவும் நிசப்தம்..., என் நண்பர்கள் விடும் மூச்சையும் நான் கேட்கக்கூடிய அளவுக்கு இருக்கும்!

மனிதன் பாவம் செய்த போது..., முதலாவது தேவன் ஏதேன் தோட்டத்தில் உலாவினார் (ஆதி. 3:8). பின்னர் தேவன் மனிதனாகி, தமது வாசஸ்தலத்தை நம்மோடு கூட அமைத்துக் கொண்டார் (யோவா. 1:14). தேவனை, நம் நடுவே உலாவ அனுமதிக்கிறதின் மூலம், அவர் நம் தேவனாகிறார். நாம் அவர் பிள்ளைகள் ஆகிறோம் (லேவி. 26:12). ஒருமுறை...., தம்முடைய சீஷர்கள் புயல்காற்று சீறி வீசின கடலில் பயணிக்கையில்..., இயேசு தாமே கடல் மேல் நடந்து வந்து, அவர்கள் படவில் ஏறினார். உடனே காற்று அமர்ந்தது. சகலமும் அமைதியாயிற்று (மத். 14:32). நம் நடுவில் உலாவும்படி தேவனைக் கேட்டுக் கொள்வதே..., நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சிறந்த வழி ஆகும்.

தேவனை..., என் வாழ்வில் உள்ள பிரச்சனைகளிடையே உலாவ, நான் அனுமதிக்கிறேனா?

நாம் எவ்வளவு அதிகமாக தேவனை உலாவ அனுமதிக்கிறோமோ, அவ்வளவு குறைவாகவே நாம் நடக்க வேண்டியதிருக்கும்.

ஜெபம்: கர்த்தாவே, தயவுகூர்ந்து நீர் என்னோடும், என் நண்பர்களோடும், நீர் சிருஷ்டித்த மற்ற ஒவ்வொரு மனிதனோடும் நடப்பீராக. ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்