பரிசுத்த ஸ்தலத்தை தீட்டுப்படுத்தல்
B.A. Manakala
உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, உமது நாமத்தின் வாசஸ்தலத்தை தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள். சங். 74:7.
ஒருமுறை, இந்து நண்பர் ஒருவருடன் நான் சென்ற போது, ஒரு இடத்திலே..., அவர் தன் காலணிகளை கழற்றுவதை நான் கவனித்தேன். அவர் மீது எனக்கிருந்த மரியாதை காரணமாக, நானும் என்னுடைய காலணிகளைக் கழற்றினேன். மக்கள் அந்தப் பகுதியை செருப்புகள் அணியாமலே தான் கடந்து சென்றனர்.., ஏனென்றால், அந்தப் பகுதி... ஓர் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. அவருடைய தெய்வத்திற்காய் அவர் கொண்டிருந்த பக்தியைக் கண்டு நான் வியப்புற்றேன்.
ஆலயக் கட்டிடங்களை பாழாக்குவது, மற்றும் கிறிஸ்தவர்களை துன்புறுத்துவது ஆகிய இரண்டையுமே... தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தை தீட்டுப்படுத்தும் காரியங்களாகக் கருதலாம்... ஏனென்றால், நம்முடைய சரீரங்களும் தேவனுடைய ஆலயங்களே (1 கொரி. 6:19). ஆனாலும்..., தாங்கள் செய்கிறது இன்னதென்று அவர்கள் அறியாதிருக்கிறபடியால், இயேசு செய்ததைப் போலவே, நானும் தேவனிடம் ஜெபித்து, அவர்களை மன்னிக்கும்படி கேட்கவே விரும்புகிறேன் (லூக். 23:34). எப்படியிருந்தாலும்.., இந்த உலகில் பல உபத்திரவங்களும், துக்கங்களும் நமக்கு இருந்துதானே ஆக வேண்டும்! (யோவா. 16:33). ஆயினும், அவருடைய ஆலயத்தை பாதுகாக்க வேண்டிய நாமே, அதைப் பாழாக்கிப் போடும்போது...., அதற்கு என்னிடம் பதில் இல்லை!
கிறிஸ்துவின் சரீரத்தை என்னால் பராமரிக்க முடியவில்லை என்றால்..., அல்லது தேவனின் ஆலயமாக, என்னுடைய சரீரத்தைத் தகுதியாக வைத்திருக்க முடியவில்லை என்றால்..., நான் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தவில்லையா?
அவருடைய பரிசுத்த ஸ்தலத்தை பாழாக்கிப் போடுகிறவர்களின் அறியாமையை அவர்களுக்கு மன்னியுங்கள். நாமே அதைத் தீட்டுப்படுத்தாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
ஜெபம்: கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கு, என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment