முன்பு நடந்த அற்புதங்களை இப்பொழுது காண்பதில்லையா?
எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம். தீர்க்கதரிசியும் இல்லை. இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை. சங். 74:9.
பல வருடங்களுக்கு முன்பு..., தொடர்வண்டித் தடத்தின் (railway track) அருகே இருந்த ஓர் அறையிலே நான் வசித்து வந்தேன். முதலில் சில நாட்களுக்கு..., இரவிலே தொடர்வண்டி(train) எப்போதெல்லாம் கடந்து செல்லுமோ, அப்போதெல்லாம் நான் என் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வேன். ஆனால் படிப்படியாக..., வண்டிகள் எப்போது கடந்து செல்கின்றனவென்றே கண்டுகொள்ளாத அளவிற்கு..., அந்த சத்தத்திற்கு நான் மிகவும் பழகிப் போனேன்!
அற்புதங்களைக் காணாததைக் குறித்தும், தீர்க்கதரிசிகளும் இல்லாததைக் குறித்தும் சங்கீதக்காரர் குறைபட்டுக் கொள்கிறார் (சங். 74:9). சில சூழ்நிலைகளில் தேவன் எவ்விதம் கிரியை செய்கிறார் என்பதைப் பல காரணங்களுக்காக நாம் புரிந்து கொள்ளாதிருக்கலாம். அவருடைய சத்தத்தை நாம் கேட்காதிருக்கலாம். அல்லது அவருடைய பிரசன்னத்தை நாம் அனுபவிக்காதிருக்கலாம். கீழ்க்காண்பவை... இதற்கான சில காரணங்களாக இருக்கக் கூடும்: 1) தேவனுடைய கிரியை, குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காகத் தாமதிக்கிறது (யோவா. 11:4). 2) நம்முடைய விசுவாசக் குறைபாட்டின் காரணமாக, அவர் அற்புதங்களைச் செய்யாதிருக்கலாம் (மாற். 6:5). 3) அல்லது, நாம் அவற்றைக் காணாதிருக்கலாம் (மாற். 8:18). நாம் காண்கிறோமோ இல்லையோ, தேவன் எப்போதும் கிரியை செய்து கொண்டே தான் இருக்கிறார். அவருடைய ஜனங்களும் எப்போதுமே சுற்றிலும் இருக்கிறார்கள்.
நான் எப்போதுமே, சுற்றியுள்ள தேவனின் அற்புதங்களைக் காண்கிறேனா?
தேவன் அமைதியாய் இருப்பது போலத் தோன்றும்போதும் கூட, மெய்யாகவே அவர் எவ்விதம் கிரியை செய்கிறார் என்பதைக் கண்டுபிடியுங்கள். அப்போது, நாம் ஒருபோதும் குறைகூற முடியாது.
ஜெபம்: கர்த்தாவே, எப்போதும் உம்மையும், உம் கிரியையையும், உம்முடைய ஜனங்களையுமே காணத்தக்கதாக, என்னுடைய கண்களைத் திறந்தருளும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment