தேவனை நிந்தித்து, கனவீனம் பண்ணுகிறோமா?

B.A. Manakala

தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ? சங். 74:10.

உங்களை நேருக்கு நேர் சந்திக்கிற போதெல்லாம், உங்களைப் புகழ்ந்து தள்ளுகிற ஒரு நபரை நினைத்துப் பாருங்கள். அதே நபர், அவருக்கு வாய்ப்புக் கிடைக்கிற பொழுதெல்லாம், உங்களைப் பற்றிப் புறங்கூறித் திரிகிறார் என்றால்..., அவருடைய புகழ்ச்சிகளுக்கு எந்த மதிப்புமே இல்லை.

அநேகமாக, நாம் வேண்டுமென்றே தேவனை கனவீனம் பண்ணுகிறதில்லை. ஆனால், வேத வசனங்களை ஆராய்ந்து பார்க்கும் போது, நாம் அவரை கனவீனம் பண்ணுகிற பல்வேறு வழிகளைப் பற்றி நாம் அறிவோம். அவற்றுள் இரண்டு என்னவாக இருக்கலாமென்றால்...., (1) நம்முடைய இருதயங்கள் அவரைவிட்டு தூரமாய் இருக்கையில், நம்முடைய உதடுகளால் மாத்திரம் தேவனைக் கனம் பண்ணுதல் (ஏசா. 29:13).  (2) நியாயப்பிரமாணத்தை மீறுவதின் மூலம், அவரைக் கனவீனம் பண்ணுதல் (ரோம. 2:23). நம் எல்லாருக்குமே, அந்தரங்கமான மற்றும் வெளியரங்கமான வாழ்க்கை உள்ளது. அந்த இரண்டிலுமே தேவனை கனம் பண்ணுவதும், மாய்மாலமான இரட்டை வாழ்க்கை வாழாதிருப்பதும் முக்கியமானது.

நான் தேவனை மெய்யாய் கனம் பண்ணத்தக்கதாக..., என்னென்ன சரியான நடவடிக்கைகளை நான் எடுக்கலாம்?

நம் உதடுகளால் தேவனை கனம் பண்ணுவது எளிது; ஆனால் தேவனோ நம் இருதயத்தைப் பற்றிதான் கவலை கொள்கிறார்.

ஜெபம்: கர்த்தாவே, என் வாழ்வின் எல்லாப் பகுதிகளுடன் உம்மைக் கனம் பண்ண எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்