பூர்வ காலமுதல் உள்ள ராஜா!

B.A. Manakala

பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்து வருகிற தேவன் பூர்வ காலமுதல் என்னுடைய ராஜா. சங். 74:12.

2018ம் வருடம்..., நாங்கள் குடும்பமாக வேல்ஸ் (Wales) தேசத்திற்கு விஜயம் செய்த போது..., அங்குள்ள டிரெலெக் (Trellech) என்ற இடத்தில் இருந்த ஹரால்ட் கற்களைப் (Harold's stones) பார்ப்பதற்கான வாய்ப்பு கிட்டியது. வெண்கல யுகத்திற்கு 3500 ஆண்டுகள் முந்தைய  காலகட்டத்தைச் சார்ந்த அவற்றைப் பார்த்ததே... பிரமிப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது! இவ்வளவு நீண்ட நெடுங்காலமாக நிலைத்திருக்கும் ஒன்றைப் பற்றிப் புரிந்து கொள்வதென்பது அவ்வளவு எளிதல்ல!

பூமியில் பலர் ராஜாக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ராஜாக்களாக அபிஷேகம் பண்ணப்பட்டனரே ஒழிய, அவர்களில் ஒருவரும் ராஜாவாகவே பிறந்து வரவில்லை. இங்கே இருக்கிற ஒருவர்..., கடந்த யுகாயுகங்களுக்கும், இனி வரப்போகிற யுகங்களுக்கும் ராஜாவாக இருக்கிறவர். அவரை அபிஷேகம் பண்ணத்தக்க ஒருவரும் அவருக்கு மேல் இல்லை! பூமிக்கு இரட்சிப்பைக் கொண்டு வரக்கூடியவர் அவர் ஒருவர் மாத்திரமே (சங். 74:12); அவர் ஒருவரே சதாகாலங்களிலும் அரசாளுகிறவர் (சங். 146:10); அவர் ஒருவர்  மட்டுமே சகல ஜாதிகளின் மேலும் ஆளுகை செய்கிறவர் (சங். 47:8); அவர் ஒருவர் மாத்திரமே ராஜாதி ராஜாவாக இருக்கிறவர்! (1 தீமோ 6:15). நாம் ஐம்பது அல்லது நூறு வயதை உடையவர்களாய்..., பூமியில் இதுவரை நாம் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து..., ஏராளமான அனுபவங்களைப் பெற்றவர்களாக இருக்கலாம். ஆனால்..., 'யுகங்களைக் கடந்தவர்' என குறிப்பிடத்தக்கவர் ஒரே ஒருவர் மட்டுமே இருக்கிறார். நம்மிலே யார்யாரெல்லாம் அவருடைய குடும்பத்தின் அங்கத்தினராகி இருக்கிறோமோ..., அவர்களெல்லாரும், என்றென்றுமுள்ள சதா காலங்களிலும் அவரோடேகூட ஜீவிக்க முடியும் என்பது தான் இதன் சிறப்பம்சம்!

என்னுடைய வயதை தேவனுடைய வயதோடு ஒப்பிடுவதென்பது..., கேட்பதற்கு எப்படி இருக்கிறது?

நாம் ஒருபோதும் கற்பனை செய்யக்கூடாத அளவிற்கு..., ஆரம்பகால வரலாற்றிற்கும்.., சமீபத்திய எதிர்காலத்திற்கும்... அப்பாற்பட்டவராய் தேவன் இருக்கிறார்!

ஜெபம்: கர்த்தாவே, இனி வரப்போகிற யுகா யுகங்களுக்கும்... உம்மோடு இருக்கப் போகிற என்னுடைய வாழ்வைப் பற்றின சரியான கண்ணோட்டத்துடன்..., இன்று என் வாழ்க்கையை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்