சமுத்திரத்தைப் பிளந்தார்!

B.A. Manakala

தேவரீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர். சங். 74:13.

டைட்டன்(Titan) கைக்கடிகார தயாரிப்பாளர்களிடம், பின்னோக்கி இயங்கும் ஒரு கடிகாரத்தைச் செய்து தரும்படி நாம் கேட்டால்..., அதற்கு அவர்கள் ஒரு நிமிட எந்திர மாற்றத்தை மட்டுமே செய்ய வேண்டியிருக்கும். அப்படியானால்..., அண்ட சராசரங்களைப் படைத்த சிருஷ்டிகருக்கு..., சூரியனை அதின் மண்டலத்திலே 24 மணி நேரம் நிறுத்தி வைப்பதும், அதன் பாகையைப் பின்னிட்டுத் திரும்பச் செய்வதும், கடலைப் பிளப்பதும், தண்ணீரின் மேல் நடப்பதும், மரித்தோருக்கு ஜீவன் கொடுப்பதும்...., மிகவும் எளிதானதாக இருக்கும் இல்லையா? அவரால் முடியாதது தான் என்ன?!

சங்கீதம் 74ல் 13 முதல் 17 வரையிலான வசனங்களை நாம் வாசித்தால்..., அவை நமக்கு தேவனின் வல்லமை பற்றின சில குறிப்புகளைத் தரலாம். தேவன் செய்த மற்றும் செய்கிற அனைத்து பெரிதான, வியத்தகு அற்புதங்களும்..., அவர் உண்மையிலேயே என்ன செய்ய முடியுமோ.... அவற்றைவிட மிகக் குறைவான..., அணுவிலும் சிறிய அளவே ஆகும். இப்படிப்பட்ட ஒப்பீடுகளும் கூட..., தேவனைக் கீழ்ப்படுத்த மட்டுமே போதுமானதாக இருக்கும் என நான் நம்புகிறேன்!

தேவனைத் தவிர வேறொருவரும்..., ஒருபோதும் கடலை இரண்டாகப் பிளக்க முடியாது! நம்மைப் போன்ற ஒரு மனிதனான மோசேயின் மூலம் தேவன் அதைச் செய்தார். இந்த முழு விஷயத்தின் அற்புதமான சாராம்சம் இதோ...:- நாம்  விசுவாசித்து, அவரை நம்பினால்..., அவர் செய்கிற அல்லது விரும்புகிற எதையும்..., உங்களையும் என்னையும் செய்ய வைக்கிறார்!

தமது பணியின் ஒரு பகுதியாக, அனுதினமும் 'பல கடல்களைப் பிளக்க' தேவன் எனக்கு உதவுகிறதை நான் காண்கிறேனா?

தேவன், நாம் நினைக்கிற அளவுமட்டுமே வல்லமை படைத்தவர் அல்லர். அவர் எவ்வளவு வல்லமையானவர் என்பதைப் பற்றி..., நாம் தவறான முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும் என நான் நம்புகிறேன்!

ஜெபம்: கர்த்தாவே, 'நீர் எவ்வளவு வல்லமை மிக்கவர்' என்பதைப் பற்றின என் சொந்தப் புரிதலை நான் ஒருபோதும் நம்பாதிருப்பேனாக. ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்