எளிமையும் சிறுமையுமானோர் தேவனைத் துதிக்கின்றனர்
B.A. Manakala
துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்ப விடாதிரும். சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும். சங். 74:21.
கிரெடிட் சூசி உலகளாவிய சொத்து அறிக்கைப்படி (Credit Suisse Global wealth report)...., "1% சதவீத பணக்கார இந்தியர்கள், நாட்டின் செல்வத்தில், 58.4% சதவீதத்தை வைத்திருக்கிறார்கள்" ஆக்ஸ்பாம் அறிக்கைப்படி (Oxfam report)…, "இந்தியக் கோடீஸ்வரர்களின் நிகர சொத்து மதிப்பானது..., நாட்டின் முழு வறுமையையும் இரு முறை அகற்றப் போதுமானதாக இருக்கும்."
'எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமென்றால்.., செல்வந்தராக இருக்க வேண்டியது முக்கியம்'... என்று சிலர் நினைக்கலாம். ஆனால் சில பணக்காரர்களை நாம் கேட்டால்..., எல்லாம் அவர்களுக்கு நல்லபடியாக நடக்கிறதா இல்லையா என்று அவர்கள் சொல்வார்கள். 'ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது மிகவும் அரிது' என்று இயேசு கூறினார் (மாற். 10:24-25). அதே போல..., தேவனைத் துதிப்பதும், அவரிடம் விண்ணப்பம் பண்ணுவதும் கூட, ஐசுவரியவான்களுக்கு மிகவும் கடினமான காரியமே.
நல்ல செய்தி என்னவென்றால், ஏழைகளும், சிறுமையானவர்களும் தான், சுவிசேஷத்திற்கு சிறப்பாக செவிமடுத்து, தேவனை இன்னும் நன்றாகத் துதிக்கிறார்கள் (சங். 74:21). ஏழைகளைப் பொருத்தவரை..., ஜெபமும், துதியும் இயற்கையாகவே வரக்கூடும். அதே சமயம், ஐசுவரியவான்களுக்கோ..., இதற்கென திட்டமிட்ட தனி முயற்சி தேவைப்படலாம்.
நான் தேவையில் இருக்கும்போது மட்டுமே தேவனை நினைக்கிறேனா?
நாம் செல்வந்தராக இருந்தாலும் சரி, அல்லது ஏழையாக இருந்தாலும் சரி..., அனுதினமும் தேவனை இன்னும் அதிகமாகத் துதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஜெபம்: கர்த்தாவே, என்னவானாலும் சரி, நான் என் வாழ்நாளெல்லாம் உம்மைத் துதிப்பேனாக.
ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment