நியமிக்கப்பட்ட காலம்
B.A. Manakala
நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன். சங். 75:2.
நான் ஒரு இடத்திற்குச் செல்வதற்காக, ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன். அதில், புறப்பாடு நேரம் நள்ளிரவு 00:05 என்று இருந்தது. புறப்படும் நாளில்.., நான் ரயில் நிலையத்திற்குச் சென்றேன். வண்டியும் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தது. நான் ரயிலில் ஏறி, என் இருக்கைக்குச் சென்று பார்த்தால்..., அங்கே வேறு யாரோ ஒருவர் என் இருக்கையில் உட்கார்ந்திருந்தார்! எங்கள் இருவருக்கும் இடையே நடந்த சில வாக்குவாதங்களுக்குப் பின்னர்..., அவர் என்னுடைய பயணச்சீட்டை வாங்கி, எனக்குக் காண்பித்து.., அதிலிருந்த என் முன்பதிவானது, முந்தைய நாளுக்கானது என்பதைச் சுட்டிக்காட்டினார்!
ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு (பிர. 3:1-8). துன்மார்க்கருக்கு எதிராக நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவதற்குக் கூட, தேவன் ஒரு காலத்தை நியமித்திருக்கிறார் (சங். 75:2). என்னைப் பொருத்தவரை, நான் ரயில் நிலையத்திற்கு சரியான நேரத்திற்கு வந்து விட்டேன் என்ற நிச்சயத்தோடு இருந்தேன். ஆனாலும் கூட..., தவறு என் மீது தான் இருந்தது. தேவன், திட்டமிட்ட காலத்திலும், நியமிக்கப்பட்ட வேளையிலும் காரியங்களைச் செய்கிறார். தேவனுடைய வேளையானது..., எப்போதுமே நமக்கு மிகவும் வசதிப்பட்ட ஒன்றாக இல்லாதிருக்கலாம். ஆயினும்.., அவருடையதே சிறந்த வேளை.., நம்முடையதல்ல. இயேசு தன் தாயிடம், " என் வேளை இன்னும் வரவில்லை" என்று கூறினார். ஆனால், தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றி..., அந்த அற்புதத்தை மிகச் சரியான வேளையிலே நிகழ்த்தினார்! (யோவான் 2).
அடுத்த முறை..., "ஏன் தேவனே தாமதிக்கிறீர்?" என்று தேவனிடம் கேட்க வேண்டும் போல உங்களுக்குத் தோன்றினால்..., உங்கள் கேள்வியை மறு பரிசீலனை செய்து, எவ்விதம் கேட்பீர்கள்?
தேவன்..., முந்தவுமில்லை. பிந்தவுமில்லை. ஆயினும்... அவருடைய பூரண வேளையானது, நம்முடைய வேளையோடு ஒத்து வராமல் இருக்கக் கூடும்.
ஜெபம்: கர்த்தாவே, எப்போதுமே உம்முடைய நியமிக்கப்பட்ட காலத்திற்குக் காத்திருக்க.., எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment