பூமியின் அஸ்திபாரத்தை நிலையாக வைத்திருப்பவர் யார்?

B.A. Manakala

பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்து போகிறது. அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். சங். 75:3.

'நீர்மப் பொருட்கலவையைக் கொண்டு சுவர்' (Slurry wall) எழுப்பக் கூடிய கட்டிடக்கலைத் தொழில்நுட்பமே..., உலக வர்த்தக மையத்தின் (World Trade Centre) இரட்டை கோபுரங்களுக்கு (Twin Towers) அடித்தளமாகப் பயன்படுத்தப்பட்டது. 1973ல் நிறுவப்பட்ட இவை..., 2001 செப்டம்பர் 11ல் விமானங்களைக் கொண்டு தாக்கப்பட்டன.

தேவனின் படைப்பில் ஒரு பகுதியான... கற்பாறைகளின் மேல் கட்டுவதை மனிதன் எளிதாகக் காண்கிறான். சொல்லப்போனால்..., தேவன் ஏற்கனவே படைத்து வைத்துள்ளவற்றின் மேலே மட்டுமே நாம் கட்டமைக்கிறோம். ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளவற்றை மட்டுமே பயன்படுத்துகிறோம்! ஆகவே..., அஸ்திபாரங்கள் அவருடையவை.

'தேவனே பூமியின் அஸ்திபாரங்களை வலுவானதாக வைத்திருக்கிறார் என்றால்..., பூமி அதிர்ச்சிகள் ஏன் நிகழ்கின்றன?'... என்னும் கேள்வியை, நமக்குக் கேட்கத் தோணலாம். பூகம்பங்களை நிறுத்துவதற்கோ.... அல்லது பூமியின் அடித்தளத்தை வலுவாக வைத்திருப்பதற்கோ...., நீங்களும் நானும் செய்யக்கூடிய ஏதாவது ஒன்று உண்டா...? எந்த சக்தியாலும் அசைக்க முடியாத அளவுக்கு..., எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலுவான அடித்தளத்தை... தேவன் அமைத்திருக்கிறார். அவைகளே அசைக்கப்படுகின்றன என்றால்...,  'தேவன் அதை அனுமதிக்கிறார்'... என்பதே அதற்குக் காரணம்.

நாம் கட்டுகிறவற்றை தேவன் அசைக்கக் கூடும். ஆனால்..., தேவன் கட்டுகிறவற்றை நம்மால் அசைக்கவே முடியாது.

ஜெபம்: கர்த்தாவே, நீர் அமைத்துள்ள வலுவான அடித்தளங்களை நான் காணவும், அவற்றின் மேல் கட்டமைக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்