புல்லையும், பூவையும் போல!
Tuesday, March 30, 2021
B.A. Manakala
பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே. நியாயக்கேடு செய்கிறவர்கள் மேல் பொறாமை கொள்ளாதே. அவர்கள் புல்லைப் போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப் போல் வாடிப் போவார்கள். சங். 37:1-2.
புற்களும், பூக்களும் சீக்கிரமே செழித்து..., சீக்கிரமே வாடியும் போகும்! மனுஷருடைய நாட்களும்..., புல்லுக்கும், பூவுக்கும் ஒப்பாயிருக்கிறது. சீக்கிரமே செழித்து, சீக்கிரமே அறுப்புண்டுபோம் (சங். 103:15). துன்மார்க்கரும் கூட, புல்லைப் போலவே அறுப்புண்டு போவார்கள் (சங். 37:2). ஆரோக்கியம், செல்வம், நண்பர்கள், வேலை, சொத்துபத்துகள்..., இன்னும் இது போன்ற..., அநேகமாய் பூமியில் நாம் காண்கிற அனைத்திற்குமே.., கிட்டத்தட்ட இதே இயல்பு தான் உள்ளது. அப்படியானால்..., அறுப்புண்டு போகாத ஏதேனும் ஒன்று இருக்கிறதா? ஆம்! கர்த்தர் ஒருவரே அழியாதவர்!
வசனங்கள் 3-5, ஞானமுள்ள வழிமுறைகளை வழங்குகிறது:
2) கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இரு.
3) நீ செய்கிற எல்லாக் காரியத்தையும் கர்த்தருக்கு ஒப்புவி.
கர்த்தருடைய வசனமும் கூட என்றென்றைக்கும் நிற்கும் (ஏசா. 40:8).
புல்லும், பூவும் செழித்து..., உதிர்ந்துபோம். தேவனும், அவருடைய வார்த்தையும் ஒருபோதும் அழியா!
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, இவ்வுலகில் புல்லைப் போல் இருக்கிற மற்றெல்லாவற்றைக் காட்டிலும்..., உம்மையே எப்போதும் நம்புவதற்கு எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment