தேவன் நகைக்கிறார்!

Wednesday, March 31, 2021

B.A. Manakala

துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன் பேரில் பற்கடிக்கிறான். ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார். அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். சங். 37:12-13.

பொதுவாக..., சிரிப்பது பொழுதுபோக்கின் ஒரு பகுதியாகும். நாம் எல்லோருமே சிரிப்பதை அனுபவித்து, ரசிக்கிறோம். ஆனால்..., நீங்கள் நெருக்கத்தில் இருக்கும் போது, யாராவது உங்களைப் பார்த்து நகைப்பதை நீங்கள் கவனித்தால்..., உங்களுடைய உணர்வு என்னவாக இருக்கும்? நிச்சயமாக மிகவும் வெறுப்பூட்டும்!

 

யாராவது நீதிமான்களுக்கு விரோதமாகப் பொல்லாங்கான திட்டங்களைத் தீட்டினால், தேவன் நகைக்கிறாராம்! ஏனெனில்..., அப்படிப்பட்ட திட்டங்களைத் தீட்டுகிறவர்களுக்காய்க் காத்திருக்கிற நியாயத்தீர்ப்பை அவர் அறிந்திருக்கிறார். நாமும் கூடதேவனுடைய ஆலோசனையைப் புறக்கணித்து, அவருடைய கடிந்துகொள்ளுதலை நிராகரித்தால்.., நாம் கஷ்டத்தில் இருக்கும் போது, அவர் நம்மையும் பார்த்து நகைப்பார்! (நீதி. 1:25-28). ஆனால்.., தேவனுக்குச் செவிகொடுக்கிற அனைவரும், விக்கினமின்றி வாசம் பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பார்கள். (நீதி. 1:33). சங் 2:4 மற்றும் சங் 59:8 ஆகிய வசனங்களையும் வாசியுங்கள்.

மனிதர் உங்களுடைய வார்த்தைகளையோ, செயல்களையோ ரசித்துச் சிரித்தால்..., அது ஒருவேளை மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கலாம். ஆனால், தேவன் நகைக்கிறார் என்றால்..., எச்சரிக்கையாக இருங்கள்!

ஜெபம்: கர்த்தாவே, உமக்கு கவனமாய் செவிகொடுக்கவும், தேவைப்படும் போது  எனக்கு நானே எச்சரிக்கை செய்து கொள்ளவும், எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்