சிறியது சிறந்ததா?
Thursday, April 01, 2021
B.A. Manakala
அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப் பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. சங். 37:16.
அநேகமாக..., மானிடர் அனைவருமே கொஞ்சமாகிலும் பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள்...., என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்! செல்வந்தர், ஏழைகள்... என இரு தரப்பினருமே, 'தங்களுக்குப் போதுமானது இல்லை' என்று நினைக்கிறார்கள். எனவே... இவ்விருதிரத்தாருமே மேலும் மேலும் சம்பாதித்துக் கொண்டே இருக்கிறார்கள். "செல்வந்தராய் இருப்பதே சிறந்தது" என்பது போன்ற இலக்குரை, இருதரப்பினருக்குமே பொருந்தக் கூடும்.
இங்கே..., வித்தியாசமான ஒரு கோஷம் வருகிறது..., நீதிமானுக்குள்ள "கொஞ்சமே நல்லது" என்று.! ஏழை விதவையிடம் இருந்து வருகிற இரண்டு காசுகளே மேல் (லூக். 21:2). கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப் பொருளே உத்தமம் (நீதி. 15:16). உத்தமமாய் நடக்கிற தரித்திரனே வாசி (நீதி. 19:1).
"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி, உங்கள் குறைவையெல்லாம், கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் (பிலி. 4:19). இவ்வசனத்தின் இரு பக்கங்களாவன: (முதலாவது) உங்களுக்கு நிச்சயமாகத் தேவைகள் இருக்கும். (பின்னர்) தேவன் அவையெல்லாவற்றையும் சந்திப்பார்.
ஒருபோதும் ஆஸ்தியில் அல்ல..., தேவனில் நம்பிக்கை வையுங்கள்!
ஜெபம்: கர்த்தாவே, நித்திய வளங்களால் என்னை ஆசீர்வதித்து..., பூமியில்,என் தேவைகளை எல்லாம் சந்தியும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment