மறைந்து போகும் புகை!
Friday, April 02, 2021
B.A. Manakala
துன்மார்க்கரோ, அழிந்து போவார்கள். கர்த்தருடைய சத்துருக்கள், ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப் போல் புகைந்து போவார்கள். அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள். சங். 37:20.
இரண்டு நாட்களுக்கு முன்பு..., கொஞ்சம் காய்ந்த சருகுகளையும், குப்பைகளையும், எங்களுடைய வீட்டு முற்றத்தில், நாங்கள் குடும்பமாக எரித்துக் கொண்டிருக்கையில், திடீரென அது கடும் புகையை உண்டாக்கியது. அந்தப் புகைக்குத் தப்பிக்க, நாங்கள் அனைவரும் அங்கிருந்து ஓடினோம். ஆனால் ஐந்தே நிமிடங்களில், புகை அனைத்தும் மறைந்து போனது!
வரலாற்றிலே..., பலர், கிறிஸ்தவர்களையும், அவர்களுடைய தேவனையும் எதிர்த்துள்ளனர். சிலர், கிறிஸ்தவத்தின் சுவடே இப்பூமியில் இல்லாதபடி அழித்துவிடக் கங்கணம் கட்டிக் கொண்டு முயற்சித்தனர். இன்றும் கூட, ஒரு சிலர், அதே போன்ற விருப்பத்துடன் முயற்சித்துக் கொண்டிருக்கக் கூடும்.
நாம் புகைக்கு அஞ்சுகிறோமா? இல்லையெனில், நம்முடைய சத்துருக்களுக்கு நாம் எப்படி அஞ்ச முடியும்? கர்த்தருடைய சத்துருக்கள், புகையைப் போல ஒழிந்து போவார்கள் (சங். 37:20). அவர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாது!
நெருப்பு, புகையை ஏற்படுத்தக் கூடும். ஆனால் அது சீக்கிரமே மறைந்து போகும்!
ஜெபம்: கர்த்தாவே, தயவு கூர்ந்து, உம்முடைய சத்துருக்களைப் பற்றின சரியான கண்ணோட்டத்தில் என்னை வையும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment