உங்கள் மனதை நிரப்புங்கள்
Thursday, April 08, 2021
B.A. Manakala
அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது. அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. சங். 37:31.
நம்மில் அநேகர் இந்நாட்களில் கொரோனா பற்றிய செய்திகளால் நம் மனதை நிறைத்துக் கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆம்.., உங்களைச் சுற்றியுள்ள, மற்றும் உலகெங்கிலும் உள்ள தற்போதைய நிலைமையை அறிந்து கொள்வது முக்கியமே. ஆகிலும்..., இதுபோன்ற செய்திகளால் உங்கள் மனதை நிரப்புவதால்... ஏதாகிலும் பிரயோஜனம் உண்டா?
தேவனுடைய பிள்ளைகளாக, நாம் 'நம் இருதயத்தை எதினால் நிரப்புகிறோம்' என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. தேவனுடைய வழியில் நடப்பதே நம் பிரதான நோக்கமாய் இருக்கும் போது, நம்முடைய இருதயங்களை தேவனுடைய வார்த்தையால் நிரப்புவது மிக முக்கியமான ஒன்று. சங் 119:11 கூறுகிறது, "நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்" என்று. "இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். (மத். 12:34
பொதுவாக நீங்கள் எதை தியானித்துக் கொண்டே இருக்கிறீர்களோ, அதையே நீங்கள் எப்போதும் பேசுவீர்கள்.
ஜெபம்: கர்த்தாவே, என் இருதயத்தை தேவனுடைய வார்த்தையால் நிரப்ப எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment