பாவத்தினால் வியாதி
Wednesday, April 14, 2021
B.A. Manakala
உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை. என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. சங். 38:3.
உரியாவின் மனைவியாகிய பத்சேபாளைத் திருமணம் செய்து கொள்வதற்காக..., தாவீது அவனைக் கொன்ற பின்னர் எழுதப்பட்ட சங்கீதமாக இது இருக்கலாம். அவருடைய சுகவீனத்திற்கான காரணம் தேவனுடைய கோபம்... என்று இந்த சங்கீதத்தின் சில வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன (சங். 38:3அ). ஆயினும், அவருடைய பாவமே அவரை வியாதிக்குள்ளாக்கியது என்பதையும் தாவீது இங்கே ஒப்புக்கொள்கிறார் (சங். 38:3ஆ-4)
உங்களுடைய சொந்த பாவமே உங்களை சுகவீனமாக்க முடியும். தாவீதுடைய பாவத்தின் குற்ற உணர்வு, அவரால் தாங்கக்கூடாத பாரமாக இருந்தது (வச:4). ஆனால், அப்படிப்பட்ட குற்ற உணர்வும், சுகவீனமும் மனந்திரும்புதலுக்கு நேராக வழிநடத்துவதால், அவை நல்லதே. தாவீது பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியதாய் இருந்தாலும், அவர் மன்னிக்கப்பட்டார்.
உங்களுடைய பாவத்தைக் குறித்த குற்ற உணர்வற்று நீங்கள் இருந்தால், எச்சரிக்கையாய் இருங்கள்!
உங்களை மனந்திரும்புதலுக்கு நேராக வழிநடத்தி, அதன் மூலம் தேவனை இன்னும் கிட்டிச் சேரச் செய்கிற எந்த சுகவீனத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஜெபம்: கர்த்தாவே, என் வாழ்வில் ஏதாகிலும் பாவங்கள் இருக்குமானால்..., நான் மனந்திரும்பத்தக்கதான குற்ற உணர்வை தயவு கூர்ந்து எனக்கு அருளிச் செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment