தூரத்தில் தேவன்!
Saturday, April 17, 2021
B.A. Manakala
கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும். என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும். சங். 38:21.
நேரத்திலும், இடத்திலும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்கிறோம். நேற்று, இன்று, நாளை,... மற்றும் தொலைவு, அருகே..., ஆகியவற்றையெல்லாம் நாம் வேறுபடுத்திப் பார்க்கிறோம். ஆனால்...., தேவனோ, காலத்திற்கும், இடத்திற்கும் அப்பாற்பட்டவர். 'என்றென்றும்' என்பது தேவனின் காலம். 'எங்கெங்கும்' என்பது அவரது இடம். தேவன் எங்கிலும் இருக்கிறார் எனில் (எரே 23:24), அவர் எப்படி தூரமாய் இருக்க முடியும்? (சங் 38:21).
ஒருபோதும் தேவன், யாரையும், எதையும் விட்டு விலகியிருக்க முடியாது! ஆயினும்..., துன்மார்க்கருக்கு அவர் தூரமாயிருக்கிறார். (நீதி 15:29) ஏனெனில்..., தேவன் பாவத்தை வெறுக்கிறார் (நீதி 6:16-19). நாம் கால வரையறைக்குட்பட்டவர்களாதலால்...., மனிதராகிய நம் பொருட்டே தேவன், "நான் அல்பாவும், ஓமெகாவும், முந்தினவரும், பிந்தினவரும், ஆதியும், அந்தமுமாய் இருக்கிறேன்" என்று திருவுளம்பற்றினார்.... என நான் விசுவாசிக்கிறேன். அவருடைய காலமோ நித்தியமானது!
தேவனின் 'என்றென்றையும்', 'எங்கெங்கையும்' மனிதனால் உண்மையாக அளவிட முடியாது.
ஜெபம்: கர்த்தாவே, நீர் காலத்துக்கும், இடத்துக்கும் அப்பாற்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment