மனிதன் தேவனுக்கு உத்தரவிட முடியுமா?

Thursday, March 25, 2021

B.A. Manakala

நீர் கேடகத்தையும், பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும். சங். 35:2.

இந்த வசனம்..., ஜெபத்தின் ஒரு பகுதி போலத் தோன்றவில்லை. இந்த சங்கீதம்..., தாவீதின் ஒரு ஜெபத்தைப் போலக் காட்சியளிக்கிறது. "நன்றி செலுத்தவோ, அல்லது உதவி கோரவோ, தேவனிடம் நாம் சொல்லுகிற வார்த்தைகளே ஜெபம்" என்று... 'ஆக்ஸ்போர்டு கற்போரின் அகராதி' (Oxford learners dictionary) ஜெபத்தை வரையறுக்கிறது. ஆனால் இந்த ஜெபத்தில் தாவீது..., பெரும்பாலும் இது தன்னுடைய சொந்த மீட்பைப் பற்றியது என்றாலும்கூட.., தேவன் எவ்விதம் துல்லியமாகச் செயலாற்ற வேண்டும் என்பது பற்றி, தேவனுக்கே அறிவுறுத்தி, உத்தரவிடுகிறார் (வசனங்கள் 1-3 வாசியுங்கள்).

எதை.., எப்போது.., எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தேவன் நன்றாகவே அறிந்திருக்கிறார். ஆயினும்..., தாவீது செய்ததைப் போல..., அவருடைய பிள்ளைகளாகிய நமக்கும், நம்முடைய எதிர்பார்ப்புகளை..., குறிப்பான வழிமுறைகளோடு, தேவனுக்குப் பரிந்துரைத்து வெளிப்படுத்துகிற சுதந்திரம் இருக்கிறது.

தேவனும், அவருடைய பிள்ளைகளும்..., தேவ ராஜ்யத்தைக் கட்டுகிற பணியிலே..., தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிற சக பணியாளர்கள் ஆவர்.

ஜெபம்: அன்புள்ள கர்த்தாவே, எப்போதும் உம்மோடு கூட இணைந்து, ஜெபித்து, செயலாற்றுவதற்கு, எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்