அவருடைய சித்தம் செய்கிறதில் மகிழ்கிறீர்களா?

Friday, April 30, 2021

B.A. Manakala

என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன். உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். சங். 40:8.

வார இறுதி நாட்களில்..., பச்சைப்பசேல் என்றிருக்கும் செடிகொடிகள், பறவைகள், இன்னும் இது போன்றவை உள்ள இடங்களுக்கு... நாங்கள் குடும்பமாக, காலாற நடந்து வர முயல்வோம். இப்படிப்பட்ட அழகான படைப்புகளை நாங்கள் அனைவரும் பார்த்து ரசிக்கிறோம். நீங்கள் எதை மிகவும் ரசிக்கிறீர்கள்? எதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள்?

தேவனுடைய சித்தத்தைச் செய்கிறதிலே, தான் மகிழ்ச்சி அடைகிறதாக சங் 40:8ல் தாவீது கூறுகிறார். தேவனுடைய கட்டளைகளை தன் இருதயத்தில் எழுதி வைத்திருப்பதாக, இந்த வசனத்தின் பின்பகுதியில் தாவீது ஒப்புக்கொள்கிறார்.  இதற்குக் காரணம் என்னவென்றால், தேவனுடைய வார்த்தையின் மூலமாகவே நமக்கான தேவசித்தம் வெளிப்படுகிறது. அவருடைய வசனத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அதில் தியானமாய் இருக்கிறவர்கள் பாக்கியவான்கள் (சங். 1:2).

தேவனுடைய சித்தத்தைச் செய்கிறது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா?

கர்த்தரை நேசிக்கிறவர்கள், அவருடைய சித்தத்தைச் செய்கிறதில் மகிழ்ச்சியடைவார்கள்.

ஜெபம்: கர்த்தாவே, உம்முடைய சித்தத்தை நான் இன்னும் அதிகமாய்ச்  செய்து மகிழத்தக்கதாக, தொடர்ந்து என்னை மறுரூபமாக்கும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்