உயிருக்கு ஆபத்தா?
Tuesday, May 04, 2021
B.A. Manakala
என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி, நாணி, எனக்குத் தீங்கு செய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக. சங். 40:14.
இஸ்ரவேலர்கள், ஏராளம் யுத்தங்களைச் செய்தார்கள். ஒருமுறை கிதியோன்..., மிகப்பெரிய சேனையைக் கொண்டிருந்த மீதியானியருக்கும், அமலேக்கியருக்கும் விரோதமாக யுத்தம் பண்ணினான். தேவன் வழிகாட்டிய படி, வெறும் 300 பேர் கொண்ட ஓர் சிறு படையை கிதியோன் ஆயத்தம் செய்து, யுத்தம் பண்ணினான். கடைசியில்,அந்த 300 பேரும் எக்காளங்களை ஊதுகையில்..., தேவன் அவர்களுடைய சத்துருக்களை, ஒருவருக்கு விரோதமாக ஒருவர் எழும்பப் பண்ணினார் (நியா. 7:22).
உங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்த தருணம்... எப்போதாவது உங்களுக்கு உண்டா? எப்போதுமே நாம் ஒரு ஆவிக்குரிய யுத்தத்தில் இருக்கிறோம். நம்முடைய சத்துருவைப் பார்த்து நாம் பயப்படுகிறோமா? அல்லது.... 'நம் சத்துருவிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அவனை வெட்கத்திற்கும், அவமானத்திற்கும் உள்ளாக்க தேவனால் முடியும்' என்று நாம் விசுவாசிக்கிறோமா? (சங் 40:14)
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுகையில்..., உங்கள் உயிருக்கு ஒருபோதும் ஆபத்து இருக்க முடியாது.
ஜெபம்: கர்த்தாவே, நீர் என்னோடு கூட இருந்து, என்னை வழிநடத்துகையில், என் வாழ்க்கை ஒருபோதும் அபாயகட்டத்தில் இல்லை என்பதை அறிந்து கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment