ஏழைகளிடம் கருணை காட்டல்
Wednesday, May 05, 2021
B.A. Manakala
சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான். தீங்கு நாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து, அவனை உயிரோடே வைப்பார். பூமியில் அவன் பாக்கியவானாய் இருப்பான். அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர். சங். 41:1-2.
ஒரு சிறு வெகுமதியை ஏழைக்குக் கொடுக்க... ஒருவேளை நான் விருப்பமாய் இருக்கலாம். ஆனால்..., பணத்தைத் திருப்பித் தராத.., அல்லது தர முடியாத... ஏழைகளுக்குக் கடன் கொடுக்க இன்னமும் நான் தயங்குகிறேன்!
ஏழைக்கு இரங்குகிறவர்களுக்கு, ஏராளமான வாக்குத்தத்தங்களை வேதாகமம் அளிக்கிறது (நீதி. 19:17; 28:27). சங்கீதம் 41ன் முதல் மூன்று வசனங்கள், சிறுமைப்பட்டவர்கள் மேல் கனிவு காட்டுகிறவர்களின் பல சலுகைகளைப் பட்டியலிடுகிறது:-
1) அவர்கள் தீங்கிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
2) கர்த்தர் அவர்களைப் பாதுகாக்கிறார்.
3) அவர் அவர்களை உயிரோடே வைக்கிறார்.
4) அவர்கள் செழித்திருப்பார்கள்.
5) அவர்கள் சுகவீனமாய் இருக்கையில், கர்த்தரே அவர்களைப் பராமரிக்கிறார்.
6) அவர்களுடைய ஆரோக்கியத்தை அவரே மீட்டெடுக்கிறார்.
இது அற்புதம் அன்றோ?
ஏழைகளிடம் இரக்கமாய் இருங்கள்; பரலோக ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்.
ஜெபம்: கர்த்தாவே, ஏழைகளிடம் இரக்கமாய் நடந்து கொள்ள எனக்கு உதவி செய்யும். தயவு கூர்ந்து அதை எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment