பரத்திலிருந்து வரும் சுகம்
Thursday, May 06, 2021
B.A. Manakala
கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும். உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன். என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன். சங். 41:4.
எப்போதாவது..., எந்த வியாதியிலிருந்தாவது..., உங்களைக் கர்த்தர் சுகமாக்கி இருக்கிறாரா? ஆம்! அவரே நம் பரிகாரி. அவரால் எப்பேர்ப்பட்ட வியாதியையும் குணமாக்க முடியும்! ஆயினும்..., தேவன் நம்மைக் குணமாக்கினாலும்..., நாம் மீண்டும் நோய்வாய்ப்படுகிறோம்.
இயேசுவானவர் இவ்வுலகில் இருந்த போது.., ஏராளமானோரை சுகமாக்கினார். அவர்கள் அனைவரும் மீண்டும் சுகவீனம் அடையவே இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வெகு சிலரை அவர் மரித்தோரிலிருந்தும் கூட எழுப்பினார்! ஆனாலும்..., அந்த சரீரங்களோடு, அவர்கள் பூமியில் என்றென்றும் வாழ்ந்தார்களா?
'நான் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால், என்னைக் குணமாக்கும்' (சங். 41:4) என்கிற தாவீதின் ஜெபம் இங்கே முக்கியமானது. நம்முடைய பாவத்திலிருந்து குணமடைய வேண்டும் என்று நாம் எப்போதாவது ஜெபித்திருக்கிறோமா? நிச்சயமாக, நாம் இரட்சிக்கப்பட்ட நாளில் ஜெபித்திருப்போம். அனுதினமும் நம்முடைய பாவங்களிலிருந்து குணமடைய நாம் விரும்புகிறோமா?
சரீர சுகம் நித்திய தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனால்..., ஆவிக்குரிய குணமாக்குதல் அதைச் செய்யும்.
ஜெபம்: கர்த்தாவே, நான் என்னுடைய ஆத்மீக வியாதிகளையும் கூட... அடிக்கடி புறக்கணிக்க முனைகிறேன். நித்திய தாக்கத்தை ஏற்படுத்துகிற ஆவிக்குரிய குணமாக்குதலை, இன்னும் அதிகமாய் வாஞ்சிக்க, தயவுகூர்ந்து எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment