நேர்மையாக இருங்கள்

Friday, May 07, 2021

B.A. Manakala

நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர். சங். 41:12.

பச்சைப்பசேலென்ற ஏராளமான இலைகளோடு, மிக அழகாய்க் காட்சியளித்த ஓர் அத்திமரத்தை..., ஒருமுறை இயேசு கண்டார். ஆனால், அதன் அருகில் சென்று அவர் பார்த்த போதோ..., அதில் ஒரு கனி கூட இல்லை! (மத் 21:18-22). 'நாம் எவ்வளவு நல்லவர்கள்' என்பதை... வெளியே மற்றவர்களுக்குக் காண்பிப்பதில் நாம் கைதேர்ந்தவர்கள் தான்! உண்மையிலேயே ஒரு நபரிடம் கோபமாக இருக்கும் போதும்...அவர்களைப் பார்த்து செயற்கையாக ஒரு புன்னகை பூக்கிறோமா? உள்ளே வேறு விதமாக நாம் இருக்கையில்..., வெளித்தோற்றத்தில்... மற்றொரு விதமாக நம்மைக் காட்டிக் கொள்கிறோமா?

நாணயம் அல்லது உத்தமம் அல்லது நேர்மை என்பது கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத ஓர் குணநலன் ஆகும். வஞ்சகத் தன்மையையும், இரண்டகமும் மாறுபாடுமுள்ள மனதையும், தேவன் அறவே வெறுக்கிறார். பார்ப்பதற்கு பசுமையாகக் காட்சியளித்த அத்தி மரத்தை இயேசு சபித்தார். உண்மையோடும், உத்தமத்தோடும் இருக்கிற எவரையும் தேவன் தாங்கி, தம்முடைய சமுகத்தில் என்றென்றைக்கும் நிலைநிறுத்துகிறார் (சங். 41:12).

ஒருபோதும் உத்தமர் போல காட்சியளிப்பதோடு நின்றுவிடாதீர்கள். எப்போதும் நேர்மையாக இருங்கள்!

ஜெபம்: கர்த்தாவே, உண்மையும், நேர்மையுமாய் இருந்து, என் ஜீவிய நாட்கள் எல்லாம் என் உத்தமத்தைப் பேணிக் காத்துக் கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்