புகழ்ச்சியை விரும்புகிறீர்களா?
Tuesday, May 11, 2021
B.A. Manakala
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென். சங். 41:13.
நம்முடைய பிள்ளைகள்..., ஏதோ ஒரு காரியத்தை தாங்கள் நன்றாகச் செய்துவிட்டதாக உணர்கிற போதெல்லாம், அதைப் பெற்றோராகிய நம்மிடமும், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களிடமும் அறிவிப்பார்கள்... ஏன்? அவர்கள் பாராட்டப்படவும், புகழப்படவும் விரும்புகிறார்கள் என்பதே அதற்கான காரணம்... இல்லையா? நானும் கூட..., நான் செய்த ஏதோ ஒரு நல்ல விஷயத்திற்காக யாராவது என்னைப் புகழ்கையில், பெருமிதமாக உணர்கிறேன்.
பிறரைப் பாராட்டுவது முக்கியம். "நன்மை செய்யும்படி உனக்குத் திராணி இருக்கும் போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே" (நீதி. 3:27).
ஆனாலும்..., புகழ்ச்சி என்பது இறுதியாக..., என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் கர்த்தருக்கே உரியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், எதையெல்லாம் நம்மால் சாதிக்க முடிகிறதோ, அவற்றுக்கான மகிமையும், புகழ்ச்சியும் கர்த்தரையே சென்றடைய வேண்டும்.
எப்போதும் தேவனையும், மற்றவர்களையும் புகழுங்கள்; ஆயினும்..., இறுதி மகிமை மனிதனுக்கல்ல, தேவனுக்கே உரியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஜெபம்: கர்த்தாவே, நான் என்னவாகவெல்லாம் இருக்கிறேனோ... அதற்காகவும், என்னைச் சுற்றியுள்ள உலகத்திற்காகவும் உமக்குத் துதிகளை ஏறெடுக்கிறேன். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment