தீராத வாஞ்சை

Saturday, May 08, 2021

B.A. Manakala

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன் மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது. நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? சங். 42:1,2.

தாகமுள்ள ஒரு மான்..., நீரோடையின் அருகே இருக்கும்போது, தன்னுடைய எதிரிகளைப் பற்றி மிகுந்த கவனத்தோடு இருந்தாலும்கூட.., சுற்றிலும் இருக்கும் சூழ்நிலைகளால், அவ்வளவு எளிதாக அது திசைதிருப்பப்படுவதில்லை. தண்ணீரைக் கண்டுபிடித்து, மிகுந்த ஆவலோடு ஓடிச்சென்று, அதைப் பருகும்.

இணையதளமோ, சமூக ஊடகங்களோ இன்றி, ஒரு நாளை நம்மால் சமாளிக்க முடியுமா? நம்முடைய வழக்கமான உணவு அல்லது சாதம் இல்லாமல், ஒரு வாரம் நம்மால் தாக்குப்பிடிக்க முடியுமா? ரொம்பவே கஷ்டம் தான்..., இல்லையா?! ஜெபம் மற்றும் வேதவாசிப்பு இல்லாமல் நம்மால் ஒரு நாளோ, ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ இருக்க முடியுமா? தேவனோடு இருப்பதற்கு நாம் எந்த அளவிற்கு வாஞ்சிக்கிறோம் அல்லது ஏங்குகிறோம்?

தேவனுக்காக நாம் எவ்வளவாய் ஏங்குகிறோம்? தேவனிடமிருந்துநம்முடைய கவனத்தை எவ்வளவு எளிதாக சிதறச் செய்ய முடியும்?

நம் கவனத்தைச் சிதறடிக்கிற சூழல் கொண்டு..., தேவன் மீதான நம் வாஞ்சை அளவிடப்படலாம்.

ஜெபம்: கர்த்தாவே, அனுதினமும், உம்மை இன்னும் அதிகமாய் நேசிக்கவும், இன்னும் அதிக நேரம் உம்மோடு செலவிடவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்