உன் தேவன் எங்கே?
Wednesday, May 12, 2021
B.A. Manakala
உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று. சங். 42:3.
சமீபத்தில்..., கொரோனா பெருந்தொற்று காரணமாக, ஒரு குடும்பம் அதன் இளம் குடும்பத் தலைவனை இழந்துவிட...., அந்த அடக்க ஆராதனையை இணையத்தில் நேரலையாகப் பார்த்துக் கொண்டிருந்த நல்ல விசுவாசி ஒருவர், தேவனிடம்...., 'தேவனே, நீர் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்?' என்று மனமார்ந்து வினவிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன்.
'உன் தேவன் எங்கே?' என்கிற கேள்வியை நீங்கள் எப்போதாவது எதிர்கொண்டதுண்டா? நம் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில், 'தேவன் எங்கே?' என்று நாம் சிந்தித்திருக்கக் கூடும். அப்படிப்பட்ட வேளைகளை..., வாழ்வின் இனிமையான நல்ல நாட்களை நினைத்துப் பார்க்கவும் (சங் 42:4), தேவனைத் துதிக்கவும், அவர் மீது நம்பிக்கை கொள்ளவும், அவரை நினைவுகூரவும் (வச 5-6) பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இயேசுவும் கூட..., 'என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?' என்று சிலுவையில் கதறின போது..., அங்கிருந்த ஜனங்கள்..., தேவன் மெய்யாகவே அவரைக் கைவிட்டு விட்டதாக எண்ணினர். அது சாத்தியமா என்ன?
உடைந்த உள்ளங்கள், தேவனுடன் மிக எளிதாக இணைகின்றன.
ஜெபம்: கர்த்தாவே, வாழ்க்கையில் காரியங்கள் மாறுதலாக நடக்கும் போதும்கூட..., உம்மை நன்றாக தரிசிப்பதற்கு எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment