யார் என்னை குற்றமற்றவன் என்று அறிவிக்க முடியும்?
Thursday, May 13, 2021
B.A. Manakala
தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும், அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும். சங். 43:1.
என்னுடைய குழந்தைகளிடத்தில், நான் குற்றம் கண்டுபிடித்து..., பின்பு அவர்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகிறேன். ஆனால்..., அடுத்த கணமே, அவர்களிடம் வேறொரு தவறைக் கண்டுபிடிக்கிறேன்!
நான் இரட்சிக்கப்பட்டிருந்தாலும்..., சொல்லாலும், செயலாலும் நான் இன்னமும் பல பாவங்களைச் செய்கிறேன். நம் அனைவருடைய நிலைமையும் அது தானே? ஆயினும்..., நமக்கு மிகப்பெரியதோர் நம்பிக்கை உண்டு: நம்மை 'என்றென்றும் குற்றமற்றவர்கள்' என்று அறிவிக்க நம் தேவன் தகுதியானவர்! நம்முடைய பாவ சுபாவத்தின் மத்தியிலும், அவர் மாத்திரமே அவ்வாறு செய்ய முடியும்.
"என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார். என்னோடே வழக்காடுகிறவன் யார்? யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்" என்று ஏசாயா 50:8 கூறுகிறது.
சாத்தான், எப்பொழுதுமே உங்களைக் குற்றவாளியாக வைத்திருக்கவே முயற்சி செய்வான். ஆனால்..., கர்த்தரோ, உங்களை என்றென்றைக்கும் மன்னித்து விட்டார்!
தேவன், என்னை லட்சோபலட்சம் முறைகள் மன்னித்திருந்தாலும் கூட..., ஏழு எழுபது முறை எப்படி மன்னிப்பது என்று இன்னும் எனக்குத் தெரியவில்லை!
ஜெபம்: கர்த்தாவே, என்னை குற்றமற்றவனாக அறிவித்ததற்காக உமக்கு நான் நன்றி செலுத்துகிறேன். உமது மன்னிப்பின் ஆழத்தைப் புரிந்து கொள்வதற்கு எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment