பூர்வாங்க தகவல்

Saturday, May 15, 2021

B.A. Manakala

தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வ நாட்களில், நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள். அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம். சங். 44:1.

இரண்டாம் நிலைத் தகவலைக் காட்டிலும்..., எந்த இடையீடுமின்றி முதல் நிலையாகக் கிடைக்கிற அசல் மூலத்தகவலே சிறந்தது. ஒரு விஷயத்தை, வேறு ஏதோ ஓரிடத்திலிருந்து கேட்பதைக் காட்டிலும்..., அதையே உங்கள் நண்பர் கூறக் கேட்பது, இன்னும் அதிகமாய் நம்பத் தகுந்ததாக இருக்கும் இல்லையா?

"ஆதி முதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்" என்று 1 யோவான் 1:1ல் வாசிக்கிறோம்.

தேவனைக் குறித்தான, உங்களுடைய நேரடி அனுபவம் என்ன? பிறரிடம் உறுதியான நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்ளத்தக்கதாய்... கர்த்தரைப் பற்றின நிஜமான தகவல், உங்களிடம் என்ன உள்ளது?

உண்மையான தகவலை மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஜெபம்: கர்த்தாவே, அனுதினமும்..., உம்மை மேன்மேலும் அனுபவிக்க எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)     

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்